கம்பராமாயணம் 382 · பால 7.52

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கடக்க அரும் வலத்து எனது காவல் இதில் யாவும்
கெடக் கரு அறுத்தனன்; இனிச் சுவை கிடக்கும்
விடக்கு அரிது எனக் கருதி ஓ? விதி கொடு உந்தப்
பட கருதி ஓ? பகர்மின் வந்த பரிசு!' என்று ஏ.

பொருள் · Meaning in Tamil

கடக்க அரும் வலத்து எனது காவல் இது - வெல்லுதற்கரிய வலிமை உடைய என்னுடைய ஆட்சிக்கு உட்பட்டது இது; யாவும் கெட கரு அறுத்தனென் - இங்குள்ள எல்லாம் கெடும்படி கருவறுத்துவிட்டேன்; இனி சுவை கிடக்கும் விடக்கு அரிது எனக்கருதியோ - இனிமேல் எனக்குச் சுவைமிக்க ஊன் கிடைப்பது அரியது என்று எண்ணியோ (அல்லது); விதிகொடு உந்த பட கருதியோ - விதி தனது வலிமைகொண்டு தள்ள நீங்கள் அழிந்து போக நினைத்தோ; வந்த பரிசு பகர்மின் என்றே - இங்குவந்த தன்மையைச் சொல்லுங்கள் எனச் சொல்லி.

“என்றே, ஒரு வார்த்தை உரை செய்தனள்” எனக் கூட்டிப் பொருள் கூறினும் பொருந்தும். கடக்க-அரும்: கடக்கரும் “அகரம்” தொக்கது வலத்த (வலம்+அத்து+அ) பெயரெச்சம். காவல்: தொழிற்பெயர் கரு அறுத்தல்: இளமையிலேயே அழித்துவிடல் விடக்கு: ஊன் “கொண்டு” என்பது இடைக் குறையாய் 'கொடு' என நின்றது. பட: அழிய பகர்மின்: ஏவற்பன்மை பரிசு: விதம் எவராலும் வெல்ல முடியாதவள்யான். எனது காவலுக்குரிய இந்த நிலத்திலே உள்ளதெல்லாம் அழியும்படி கருவறுத்துவிட்டேன். எனக்குத் தின்ன ஊன் கிடையாதென்றெண்ணி, உணவாக வந்தீர்களோ, விதி உந்த அழிய வந்தீர்களோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. This is my domain, guarded by strength none can overcome; so that everything
  2. would perish, I have destroyed it root and seed; did you think that tasty flesh
  3. would be hard to find now? Or, with fate driving you,
  4. did you mean to die? Tell me why you have come! she said.

What the poem says

Tāṭakai mocks the intruders. This land is hers, held by a strength no one can defeat, and she has wiped out every living thing in it down to the unborn.

Did they come because they feared she would run short of tasty meat and wished to offer themselves as dinner? Or is fate pushing them toward death? She demands to know why they have come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṭakka arum valattu eṉatu kāval itu; yāvum
keṭa, karuvaṟuttaṉeṉ; iṉic cuvai kiṭakkum
viṭakku aritu eṉak karutiyō? vitikoṭu unta,
paṭak karutiyō? pakarmiṉ vanta paricu!' eṉṟē.