கம்பராமாயணம் 383 · பால 7.53

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மேகம் அவை இற்று உக விழித்தனள்; புழுங்கா
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து எறிவன்' என்று எதிர் அழன்றாள்.

பொருள் · Meaning in Tamil

மேகம் அவை அற்று உகவிழித்தனள் - மேகங்கள் தொடக்கற்று உதிரும்படி பார்த்தவளாகி, புழுங்கா - மனப்புழுக்கத்தை அடைந்து; மாகவரை அற்று உக உதைத்தனள் - தான் வரும் அப்பெரிய மலையும் அற்றுப் போய் உதிருமாறு உதைத்தவளாகிய தாடகை, மதித்திண் பாகம் எனும்முற்று எயிறு அதுக்கி - சந்திரனது வலிமைமிக்க ஒரு பாகம் என்று சொல்லத்தக்க முதிர்ந்த பற்களை அதுக்கி; அயில்பற்றா ஆகம் உற உய்த்து எறிவென் - தனது சூலத்தைப் பற்றிக் கொண்டு, உங்கள் உடலில் பொருந்துமாறு இதை எறிவேன்; என்று எதிர் அழன்றாள் - என்று சொல்லி, எதிரே நின்று சினம் கொண்டு சீறினாள்.

மேகம் அவை: மேகங்கள் என்று சொல்லப்படும் அவை. புழுங்கா: செயா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 'பற்றா' என்பதும் அது. பாகம்: பிறிவு முற்று எயிறு: முதிர்ந்தபல் உய்த்தல்: அழல்தல்: சினத்தல். தாடகையின் பற்களை “மதித்திண் பாகம் எனும் எயிறு” என்றார் 'சந்திரனது திண்ணிய ஒரு பகுதியோ என்று நினைக்கும்படியான பற்கள்' என்பது பொருள் உய்த்து: செலுத்தி என்பது பொருள் ஆகம்: மார்பு ஆகம் உறு: மார்பில் பொருந்தும்படி வீசுவேன் என்றாள் என்பது பொருளாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She glared so that the clouds broke apart and fell; seething,
  2. she kicked so that the great hill broke apart and fell; she pressed down
  3. her full-grown fangs, like solid portions of the moon, gripped her spear, and saying,
  4. I will hurl this so it lands in your chests, she blazed with anger before them.

What the poem says

Tāṭakai's fury builds. Her glare is enough to shatter the clouds and send them falling, and her kick breaks apart the mountain she has come from. She clenches her huge white fangs, which look like broken-off pieces of the moon.

Seizing her trident, she threatens to drive it into their chests and stands blazing with rage in front of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēkamavai iṟṟu uka viḻittaṉaḷ; puḻuṅkā
māka varai iṟṟu uka utaittaṉaḷ; matit tiṇ
pākam eṉum muṟṟu eyiṟu atukki, ayil paṟṟā,
'ākam uṟa uyttu eṟiveṉ' eṉṟu etir aḻaṉṟāḷ.