கம்பராமாயணம் 384 · பால 7.54

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல் முனிவற்கு - பெருமை பொருந்திய விசுவாமித்திர முனிவனுக்கு; அது கருத்து எனினும் - அந்த அரக்கியைக் கொல்வது தான் கருத்து என்றாலும்; ஆவி உண் எனவடிக்கணை தொடுக்கிலன் - அவள் உயிரை உண்டுவா வென்று கூரிய அம்பை ராமன் விடவில்லை; உயிர்க்கே துண் எனும் - உயிர்களெல்லாம் நடுங்கி அஞ்சுமாறு வினைத்தொழில் தொடங்கி உள்ளேனும் - கெட்ட செயலைத் தொடங்கியுள்ளாள் என்றாலும்; பெருந்தகை பெண் என மனத்திடை நினைந்தான் - பெருந்தன்மை உடைய இராமன் அவள் பெண் ஆயிற்றே என்று மனத்தில் எண்ணலாயினான்.

அண்ணல்: பெருமையுடையவன். அது: தாடகையைக் கொல்வது. துண்: நடுக்கம். பெருந்தகை: இராமன் (அன்மொழித் தொகை). பெண்கொலை என்பதால் - முனிவன் விரும்பினாலும் பெருந்தகையான இராமன் விரும்பவில்லை என்பதால் “ஆவி உண் என வடிக்கணை தொடுக்கிலன் பெண்என மனத்திடை நினைந்தான்” என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though that was what the noble sage intended, he did not fit
  2. a sharp arrow to his bow, telling it, Drink her life; though she had begun
  3. a deed of violence that made all living things shudder,
  4. the great-souled one thought in his mind, She is a woman.

What the poem says

Vicuvāmittiraṉ clearly wants Tāṭakai killed, yet Irāmaṉ holds back his arrow. However terrifying her deeds, he hesitates because she is a woman, and killing a woman is a grave wrong under the warrior's code.

The poet calls him "the great-souled one" for this restraint. The next few verses have the sage argue him out of it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇal muṉivaṟku atu karuttueṉiṉum, 'āvi
uṇ' eṉa vaṭik kaṇai toṭukkilaṉ; uyirkkē
tuṇṇeṉum viṉaittoḻil toṭaṅkiyuḷaḷēṉum,
peṇ eṉa maṉattiṭai peruntakai niṉaintāṉ.