கம்பராமாயணம் 385 · பால 7.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெறிந்த செம்மயிர் வெள் எயிற்றாள் தனை - தீய நாற்ற முடையவளும் சிவந்த தலைமயிரும், வெண்மையான பற்களையும் உடையவளுமான அந்தத் தாடகை; எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் - சூலத்தைச் செலுத்திக் கொல்லுவேன் என்று கூறி, கையில் ஏற்றபொழுதும் கூட; பார்க்கிலாச் செறிந்ததாரவன் - அதனைக் கண்டுகொள்ளாத அடர்ந்த மாலையை அணிந்துள்ள இராமபிரானது; சிந்தைக்கருத்தெலாம் அறிந்து - உள்ளக் கருத்தை யெல்லாம் உணர்ந்து, நான்மறை அந்தணன் கூறுவான் - நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணனாகிய விசுவாமித்திரன் கூறுவானானான்.
வெறிந்த: மணம் வீசுகின்ற (இங்குத் தீயநாற்றம் வீசுகின்ற). சிவந்த கூந்தலை உடையவளாதலின் “செம்மயிர்” என்றார். ஏற்றல்: ஏற்றுக்கொள்தல். பார்க்கிலா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ராமன் வாய்திறந்து கூறவில்லையாயினும்; மனத்திடை நினைந்ததை அறிந்த முனிவனை “நான்மறை அந்தணன்” எனச் சிறப்பித்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even as she of the reeking red hair and white fangs
- raised her spear, saying, I will hurl it and kill you, he of the thick garland
- did not look at her; knowing every thought in his mind,
- the brahmin of the four Vedas spoke.
What the poem says
Tāṭakai, foul-smelling, red-haired and white-fanged, lifts her trident and threatens to kill them, yet Irāmaṉ, wearing his thick garland, does not even look at her.
Irāmaṉ has said nothing aloud, but Vicuvāmittiraṉ, master of the four Vedas, reads exactly what is in his mind and begins to answer the unspoken scruple.