கம்பராமாயணம் 3845 · கிட்கிந்தா 2.8

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கதம் எனும் பொருண்மை இலர் ; கருணையின் கடல் அனையர் ;
இதம் எனும் பொருள் அலது , ஒர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் ;
சதமன் அஞ்சுறும் நிலையர் ; தருமன் அஞ்சுறு சரிதர் ;
மதனன் அஞ்சுறு வடிவர் ; மறலி அஞ்சுறு விறலர் .

பொருள் · Meaning in Tamil

இவர்கள் - ; கதம் எனும் - கோபம் என்னும்; பொருண்மை இலர் - பொருளின் தன்மையில்லாதவர்கள்; கருணையின் - கருணையால், கடல் அனையர் - கடலை ஒத்தவர்கள்; இதம் எனும் பொருள் அலது - நன்மை என்கின்ற பொருளை அல்லாமல்; ஓர் இயல்பு உணர்ந்திலர் - வேறொரு பொருளை (தீமையை) அறிந்தவர்கள் அல்லர்; சதமன் - இந்திரனும்; அஞ்சுறு நிலையர் - அஞ்சத்தக்க தோற்றம் உள்ளவர்கள்; தருமன் - தரும தேவதையும்; அஞ்சுறு சரிதர் - அஞ்சத்தக்க ஒழுக்கம் உடையவர்கள்; மதனன் - மன்மதனும்; அஞ்சுறு வடிவர் - அஞ்சத்தக்க வடிவழகு பொருந்தியவர்கள்; மறலி - யமனும்; அஞ்சுறுவிறலர் - அஞ்சத்தக்க ஆற்றல் நிறைந்தவர்கள்.

கோபம் இல்லாமை மட்டுமன்றி, அதற்குரிய தன்மையும் இவர்கள்மாட்டு இல்லாமையால் "கதமெனும் பொருண்மையிலர்" என்றான். தோற்றப்பொலிவில் இந்திரனைவிட, நல்லொழுக்கத்தில் அறக்கடவுளைவிட, வடிவழகில் மன்மதனைவிட, ஆற்றலில் யமனைவிட இராமலக்குவர் மேம்பட்டு விளங்கினர் என அனுமன் உணர்ந்தான். கருணை மிகுதியை உணர்த்தவே 'கருணையின் கடல் அனையர்' என நினைந்தான். சதமகன் என்பது சதமன் என மருவியது; நூறு யாகங்களைச் செய்தவன் ஆதலின் இந்திரன் சதமகன் எனப்பட்டான். (சதம் - நூறு; மகம் - யாகம்) மதனன் - களிப்பை உண்டாக்குபவன்; மறல் - கொடுமை, அதை உடையவன் மறலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "They have nothing of anger in them; they are like an ocean of compassion;
  2. these men know no nature other than doing good;
  3. their bearing would make Intiraṉ afraid; their conduct would make Dharma afraid;
  4. their beauty would make Maṉmataṉ afraid; their might would make Yama afraid."

What the poem says

Aṉumaṉ continues his silent appraisal. There is not even the capacity for anger in these men; they are a sea of compassion and know only how to do good.

In splendour they surpass Intiraṉ, king of the gods; in virtue, Dharma himself; in beauty, Maṉmataṉ, the god of love; and in might, Yama, the god of death. Each of these gods would fear being outshone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'katam eṉum poruṇmai ilar; karuṇaiyiṉ kaṭal aṉaiyar;
itam eṉum poruḷ alatu, ōr iyalpu uṇarntilar ivarkaḷ;
catamaṉ añcuṟu nilaiyar; tarumaṉ añcuṟu caritar;
mataṉaṉ añcuṟu vaṭivar; maṟali añcuṟu viṟalar.