கம்பராமாயணம் 3846 · கிட்கிந்தா 2.9

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன் பெருங்குணத்தால் - தனது சிறந்த குணங்களால்; தன்னைத் தான் அலது - தனக்குத்தானே ஒப்பாவதன்றி, ஒப்பு இலாதான் - வேறு ஒப்புமை இல்லாதவனாகிய அனுமன்; என்பன பலவும் எண்ணி - மேற்கூறியவாறு பலவற்றையும் எண்ணி; இருவரை எய்த நோக்கி - அவ்விருவரையும் உற்றுப்பார்த்து; அன்பினன் உருகுகின்ற - அன்பால் உருகுகின்ற; உள்ளத்தன் - உள்ளம் கொண்டவனாய்; ஆர்வத்தோரை - அன்புடையவர்களை; முன் பிரிந்து - முன்னர் ஒரு காலத்தில் விட்டுப்பிரிந்து; அனையர்தம்மை - அவர்களை; முன்னினான் என்ன - மீண்டும் எதிர்ப்பட்டான் போல; நின்றான் - (அன்பு கொண்டு) நின்றான்.

முன்பு ஒருகாலும் காணாத இராமலக்குவர் அனுமனுக்கு முன்னரே பழகியவர் போலவே காணப்பட்டதால் 'ஆர்வத்தோரை முன்பிரிந்து அனையர் தம்மை முன்னினான் என்ன' என்றார். வீடணன் இராமனைக் காண நினைத்த போதே, 'முன்புறக் கண்டிலேன், கேள்வி முன்பிலேன், அன்புறக் காரணம் அறியகிற்றிலேன், என்புறக் குளிரும் நெஞ்சுருகும்' என்று உருகியதைக் காணலாம். (6364)

தன்னில் தான் அலது ஒப்பிலாதான் என்றது பொது நீங்குவமை. அனுமன் தனக்கு உவமை இல்லாதவன் என்பது பெறப்பட்டது. 'தன்னலது ஒரு பொருள் தனக்கு மேலிலான்' (362) என இராமனும் கூறப்பட்டிருத்தல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking these many things, gazing closely at the two,
  2. with a heart melting in love, he stood like one who had come again upon
  3. dear ones from whom he had been parted long ago,
  4. he who, in his great virtues, has no equal but himself.

What the poem says

Aṉumaṉ, who in the greatness of his own qualities can be compared only to himself, looks long at the two strangers and feels his heart melt. Though he has never seen them before, he feels as if he were meeting beloved friends after a long separation.

The commentary compares Vīṭaṇaṉ's later words: he too will feel his heart melt for Irāmaṉ without knowing why.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉpaṉa palavum eṇṇi iruvarai eyta nōkki,
aṉpiṉiṉ, urukukiṉṟa uḷḷattaṉ, ārvattōrai
muṉpirintu aṉaiyartammai muṉṉiṉāṉ eṉṉa niṉṟāṉ
taṉ peruṅkuṇattāl taṉṉait tāṉalatu oppu ilātāṉ.