கம்பராமாயணம் 3860 · கிட்கிந்தா 2.23

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

ஒடுங்கல் இல் - சுருங்குதல் இல்லாது விரிந்துள்ள; உலகம் யாவும் - உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம்; உவந்தன உதவி - விரும்பியனவற்றைத் தானம் செய்து; தொடங்கின வேள்வி - தொடங்கின யாகங்களையும்; மற்றும் - மற்றுமுள்ள தவம் முதலியவற்றையும் முற்ற - நிறைவேற்ற; தொல்அறம் துணிவர் அன்றே - (சான்றோர்கள்) தொன்று தொட்டு வரும் அறங்களைச் செய்யத் துணிவார்கள் அல்லவா? கொடுங்குலப் பகைஞன் ஆகி - தன் குலத்திற்கே கொடிய பகைவனாகி; கொல்லிய வந்த - கொல்வதற்காக வந்த; கூற்றை - யமன் போன்ற பகைவனை எண்ணி; நடுங்கினார்க்கு - அஞ்சியவர்களுக்கு; அபயம் நல்கும் அதனினும் - 'அஞ்சாதே' என அபயம் கொடுக்கும் அறத்தைக் காட்டிலும்; நல்லது உண்டோ - மேம்பட்டதோர் அறம் உண்டோ? (இல்லை).

வேள்வி முதலாய பல்வேறு அறங்களுள், அஞ்சிச் சரண் அடைந்தவர்களுக்கு அபயம் அளிப்பதே சிறந்த அறம் ஆதலால் சுக்ரீவனுக்கு அபயம் அளித்து அருளுதல் வேண்டும் என்பது அனுமனின் வேண்டுகோளாகும். 'உடைந்தவர்க்கு உதவானாயின், உள்ளதொன்றியானாயின் அடைந்தவர்க்கு அருளானாயின், அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?' (6472) என்ற இராமன் கூற்று ஒப்பு நோக்கத்தக்கது. அபயம் - பயம் இல்லாது செய்தல்; கொல்லிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; கூற்று - உவமை ஆகுபெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To give all creatures in this unshrinking world what they desire, to complete the sacrifices
  2. they have begun and all the rest, the wise resolve upon
  3. the ancient duties, do they not? Yet is there anything better than to grant
  4. refuge to those who tremble at a Death come to kill them, an enemy cruel to his own kin?"

What the poem says

Aṉumaṉ makes his plea in the form of a general truth. The good undertake many ancient duties: generous giving, sacrifices, penance. But no duty is greater than giving refuge to someone who trembles before an enemy coming like Death to kill him, especially when that enemy is his own kin.

The application to Cukkirīvaṉ and Vālī is left unspoken. The commentary compares Irāmaṉ's own later words, when he resolves to give refuge to Vīṭaṇaṉ: what are righteousness and manhood worth if one does not protect those who come for shelter?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oṭuṅkal il ulakam yāvum uvantaṉa utavi, vēḷvi
toṭaṅkiṉa, maṟṟum, muṟṟat tol aṟam tuṇivar aṉṟē,
koṭuṅ kulap pakaiñaṉ ākik kolliya vanta kūṟṟai
naṭuṅkiṉarkku apayam nalkum ataṉiṉum, nallatu uṇṭō? '