கம்பராமாயணம் 3861 · கிட்கிந்தா 2.24

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ''

பொருள் · Meaning in Tamil

இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு - கண்கள் இமைத்தல் இல்லாத தேவர்களை முதலாகக் கொண்டு; ஆன்ற சராசரம் - உயர்ந்த அசையும் பொருள்களையும் அசையாப்பொருள்களையும்; சமைத்த ஆற்றல் - படைத்த ஆற்றலை உடைய, மும்மை ஏழ் உலகும் காக்கும் - மூன்று வகைப்பட்ட ஏழு உலகங்களையும் பாதுகாக்கும்; முதல்வர் நீர் - தலைவர் நீங்கள் (ஆதலால்); எம்மையே காத்திர் - எளியராகிய எங்களைமாத்திரமே காப்பாற்றுவீர்; என்றல் - என்று கூறுதல்; எளிது - (உங்களுக்கு) எளிமைத் தன்மையைக் கற்பிப்பது ஆகும்; முருகற் செவ்வி - முருகனைப் போன்ற சிறப்பினை உடைய; உம்மையே புகல்புக்கேமுக்கு - உங்களையே புகலிடமாகக் கொண்டு அடைக்கலம் அடைந்த எங்களுக்கு; இதின் வரும் உறுதி உண்டோ - இதைக் காட்டிலும் வந்தடையக்கூடிய நன்மை வேறு உளதோ? (இல்லை).

இராமலக்குவரின் சிறப்பை அறிந்து, அவர்தம் ஆற்றலைப்புகழ்ந்து பேசித் தமக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்குமாறு அனுமன் வேண்டினான். முருகன் - முருகை உடையவன்; அழகும் இளமையும் தெய்வத் தன்மையும் உடையவன். எம்மையே தம்மையே - ஏகாரங்கள் பிரிநிலை; அரோ - அசைநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To say, 'Protect just us,' would be to belittle you! With the unblinking gods
  2. first of all, you have the power that made all that moves and does not move;
  3. you are the lords who protect the three sets of seven worlds; for us, who have taken refuge
  4. in you alone, you with the beauty of Murukaṉ, can any greater good come than this?"

What the poem says

Aṉumaṉ completes his appeal. He recognises the brothers as the very lords who created all beings, gods first, and who protect all the worlds. To ask them to protect only Cukkirīvaṉ's little band would be to make them small.

Still, for those who have taken refuge in them, no greater blessing could come. He compares their youthful beauty to Murukaṉ's.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘’emmaiyē kāttir '' eṉṟal eḷitu arō! imaippu ilātōr
tammaiyē mutal iṭṭu, āṉṟa carācaram camaitta āṟṟal
mummai ēḻ ulakum kākkum mutalvar nīr; murukaṟ cevvi
ummaiyē pukal pukkēmukku, itiṉ varum uṟuti uṇṭō?