கம்பராமாயணம் 3862 · கிட்கிந்தா 2.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மெய்ம்மையின் வேலி போல்வான் - மெய்ம்மையைப் பாதுகாக்க அமைந்த வேலி போல்பவனாகிய அனுமன், (இராமலக்குவரைப் பார்த்து); வீர - 'வீரர்களே! எம்குலத்தலைவற்கு - எங்கள் குலத் தலைவனாகிய சுக்கிரீவனுக்கு; உம்மை நான் - உங்களை நான்; யார் என விளம்புகேன் - யாவர் என்று சொல்வேன்? நீர்பணித்திர் - நீங்கள் சொல்லுங்கள்'; என்றான் - ; வார்கழல் இளையவீரன் - நீண்ட வீரக்கழல் அணிந்த இளையவீரனாகிய இலக்குவன்; மரபுளி - முறைப்படி; வாய்மை யாதும் - உண்மைநிகழ்ச்சிகள் யாவற்றையும்; சோர்வு இலன் - சோர்வு இல்லாதவனாய்; நிலைமை எல்லாம் - தங்களுக்கு நேர்ந்த நிலைமைகளையெல்லாம்; தெரிவுறச் சொல்லலுற்றான் - நன்றாய் விளங்குமாறு சொல்லத்தொடங்கினான்.
மங்கள் யார்? என வினவாமல் 'யாரென விளம்புகேன் நான் என் குலத்தலைவற்கு உம்மை' என்ற தொடரால் அனுமன் வினவியது அனுமனின் அடக்கத்தை நாகரிகமாய் விளக்குதல் காணலாம். எப்போதும் உண்மையே பேசுபவன் ஆதலின் மெய்ம்மை காப்பதற்கு அவதரித்த இராமபிரானுக்குக் காவல் ஆவான் என்பது தோன்ற, அனுமன் 'மெய்ம்மையின் வேலி போல்வான்' எனப்பட்டான். உளி - மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தது. நாடு நீங்கியது, சீதையை இழந்தது என எல்லா நிகழ்ச்சிகளையும் விடாது உரைத்தனன் ஆதலின் 'வாய்மை யாதும் சோர்விலன் நிலைமை எல்லாம் தெரிவுற' என்றார். விளக்கமாகக் கூறியதைத் 'தெரிவுற' என்ற சொல் புலப்படுத்தும். விளம்புகேன் - ககர ஒற்று இடைநிலை - எதிர்காலம் காட்டியது. குகனுக்கும் சடாயுவிற்கும் இலக்குவனே தம் வரலாறு கூறியது இங்கு நினைக்கத் தகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Who shall I tell the chief of our race that you are?
- Heroes, tell me!" said he who is like a fence guarding truth;
- the young hero with the long anklet, in due order, leaving out nothing of the truth,
- began to tell their whole situation so that it was clear.
What the poem says
Rather than bluntly asking "Who are you?", Aṉumaṉ politely asks what he should tell his chief about them, a courtesy the commentary admires. He is called a fence that guards truth, since he will guard Irāmaṉ, who was born to uphold truth.
Ilakkuvaṉ answers for both, as he did earlier with Kukaṉ and Caṭāyu, and tells their whole story in order and in full: the loss of the kingdom, the loss of Cītai, everything.