கம்பராமாயணம் 3863 · கிட்கிந்தா 2.26

Section கிட்கிந்தா காண்டம் / 2. அனுமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூரியன் மரபில் தோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்ட
ஆரியன் ; அமரர்க்கு ஆகி அசுரரை ஆவி உண்ட
வீரியன் ; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட ,
காரியன் ; கருணை அன்ன கண்ணன் அக்கவிகை மன்னன் .

பொருள் · Meaning in Tamil

அக் கவிகை மன்னன் - அந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன்; சூரியன் மரபில் தோன்றி - சூரிய குலத்தில் தோன்றி; சுடர் நெடு நேமி - ஒளி மிகுந்த பெரிய ஆணைச் சக்கரத்தை உடையவனாய்; ஆண்ட ஆரியன் - உலக முழுவதும் ஆட்சி செலுத்திய உயர்ந்தோன்; அமரர்க்காக - தேவர்கள் பொருட்டு; அசுரரை ஆவி உண்ட - சம்பரன் முதலிய அசுரர்களை வென்று உயிரைப் பறித்த; வீரியன் - வீரம் உடையவன்; வேள்வி செய்து - பல வேள்விகளைச் செய்து; விண் உலகோடும் ஆண்ட - மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆட்சி புரிந்த; காரியன் - செயல்திறம் படைத்தவன்; கருணை அன்ன - அருளே வடிவு எடுத்தாற்போன்ற, கண்ணன் - கண்ணோட்டம் உடையவன்;

அக்கவிகை மன்னன். .... தயரதன் என அடுத்த செய்யுளில் முடியும். தேவர் வேண்ட, சம்பரன் முதலிய அசுரர்களை வென்று மீட்ட விண்ணுலகத்தைத் தயரதன் இந்திரனுக்குக் கொடுத்த சிறப்புப் பற்றி 'விண்ணுலகோடும் ஆண்ட' எனப்பட்டான். இச் செய்தி 'இன்தளிர்க் கற்பக நறுந்தேன்' எனத் தொடங்கும் பாடலிலும் (822) விசுவாமித்திரரால் உணர்த்தப்பட்டது.

கண்ணன் என்றது இங்குக் கண்ணோட்டத்தைக் குறிக்கும். நேமி - சக்கரம்; ஆணையைச் சக்கரமாகக் குறிப்பது மரபு. கவிகை - கவிந்திருப்பது; காரணப்பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Born in the line of the Sun, he was the noble one who ruled with the long, blazing wheel of command;
  2. the hero who, for the sake of the gods, drank the lives of the demons;
  3. the doer who, performing sacrifices, ruled the heavenly world as well;
  4. his eyes were like compassion itself, that king with the white umbrella,"

What the poem says

Ilakkuvaṉ begins with their father, without yet naming him. He was a king of the Solar line whose wheel of command ran over the whole earth; he fought for the gods and killed the demons, and by his sacrifices and his help to Intiraṉ he had a share in ruling heaven as well.

The commentary recalls that Tacarataṉ defeated the demon Campara and others and restored heaven to Intiraṉ, which Vicuvāmittiraṉ mentioned earlier. The sentence ends with his name in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūriyaṉ marapil tōṉṟic cuṭar neṭu nēmi āṇṭa
āriyaṉ; amararkkāka acurarai āvi uṇṭa
vīriyaṉ; vēḷvi ceytu viṇ ulakōṭum āṇṭa,
kāriyaṉ; karuṇai aṉṉa kaṇṇaṉ ak kavikai maṉṉaṉ.