கம்பராமாயணம் 3917 · கிட்கிந்தா 3.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ற்ற வெற்றி உடையவனே! தொடர - இடைவிடாமல், கடல் உளைப்பதும் - கரை கடவாமல் கடல் ஒலித்துக் கொண்டிருப்பதும்; கால் சலிப்பதும் - காற்றுவீசிக் கொண்டிருப்பதும்; மிடல் அருக்கர் - வலிமைமிக்க சூரியர்கள்; தேர்மீது செல்வதும் - தேர் மீதேறிச் செல்வதும்; அவன் - அவ்வாலி; சுளியும் என்று அலால் - சினம் கொள்வான் என்ற அச்சத்தினால் நிகழ்வதன்றி; அயலின் ஆபவோ - பிறிதொரு காரணத்தால் நிகழ்வனவோ? (அல்ல).
இது வாலியின் கோபத்தை உணர்த்தியது. கடல் முதலியனவெல்லாம் அவன் கோபத்திற்கு அஞ்சியே நடக்கின்றன என்பதாம். உளைப்பது - மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கிநிற்றல்; சலிப்பது - எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது; தேர்மீது செல்வது - தோன்றியும் மறைந்தும் அந்தந்தக் காலத்திற்கேற்ப நடந்து கொள்ளல். வாலி சினத்திற்கு அஞ்சியே இயற்கையில் செயல்கள் நடைபெறுவதாகக் கூறியதால் ஏதுத்தற்குறிப்பேற்ற அணி. மாதந்தோறும் வெவ்வேறாகச் சூரியர் பன்னிருவர் தோன்றுவர் என்பதால் 'அருக்கர்' எனப் பன்மையால் கூறினான். தொடர - இச்சொல் இறுதிநிலை விளக்கணியாய் ஒலிப்பதும், சலிப்பதும், செல்வதும் என்பவற்றோடு இயையும். இறைவனுக்குக் கட்டுப்படும் இயற்கை, வாலிக்கும் கட்டுப்பட்டு இயங்கும் என்பதால் வாலி இறைவன் போன்ற வரம்பில் ஆற்றலுடையவன் என்பது விளங்கும்.
அல்லால் - அலால் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "That the sea keeps roaring within bounds, that the wind keeps blowing,
- that the mighty suns ride on in their chariots,
- is it for any other reason, O victorious in battle,
- than fear that he will grow angry if they fail to keep on?"
What the poem says
Vālī's temper is feared by nature itself. The ocean stays within its shores, the wind keeps blowing, and the suns ride their chariots across the sky in due course, all out of fear of Vālī's anger. Nature obeys him as it obeys God.
The suns are plural because tradition counts twelve, one for each month. The poet gives fanciful causes to natural events, a figure of poetic fancy.