கம்பராமாயணம் 3918 · கிட்கிந்தா 3.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏழுபத்து வெள்ளம் உள்ள - (அவ்வாலி) எழுபது வெள்ளம் என்கின்ற அளவு உள்ளதும், மேருவைத் தள்ளல் ஆன - மேருமலையைத் தள்ளக்கூடியதுமான; தோள் அரியின் தானையான் - தோள் வலிமை உள்ளதுமான வானரப்படையை உடையவன்; வள்ளலே - வள்ளல்தன்மை உடையவனே! அவன் - அவ்வாலி; வலியின் வன்மையால் - வலிமையின் மிகுதியால், உள்ளம் ஒன்றி - மனம் ஒன்று பட்டு; எவ்வுயிரும் வாழும் - எல்லா உயிர்களும் வாழ்கின்றன;
வாலியின் சேனைச்சிறப்பும் ஆட்சிச் சிறப்பும் இங்குக் கூறப்பட்டுள்ளன. வள்ளல் என்பது இங்கு இராமனைக் குறிக்கும். வெள்ளம் என்றது பேரெண். யானை ஒன்றும், தேரொன்றும், குதிரை மூன்றும் காலாள் ஐந்தும் கொண்டது - பக்தி; பக்தி மூன்று கொண்டது சேனாமுகம்; சேனாமுகம் மூன்று கொண்டது குடமம்; குடமம் மூன்று கொண்டது கணம்; கணம் மூன்று கொண்டது வாகினி; வாகினி மூன்று கொண்டது பிரதனை; பிரதனை மூன்று கொண்டது சமூ; சமூ மூன்று கொண்டது அநீகினி; அநீகினி பத்துக் கொண்டது அக்குரோணி; அக்குரோணி எட்டுக் கொண்டது ஏகம்; ஏகம் எட்டுக் கொண்டது கோடி; கோடி எட்டுக் கொண்டது சங்கம்; சங்கம் எட்டுக் கொண்டது விந்தம்; விந்தம் எட்டுக் கொண்டது குமுதம்; குமுதம் எட்டுக் கொண்டது பதுமம்; பதுமம் எட்டுக் கொண்டது நாடு; நாடு எட்டுக் கொண்டது சமுத்திரம்; சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He has an army of monkeys seventy veḷḷam strong,
- whose shoulders could push over Mēru;
- and by the sheer weight of his might, O generous one,
- every living thing lives in harmony."
What the poem says
Vālī commands an army of seventy veḷḷam of monkeys, each strong enough to shove Mount Mēru aside, and under his powerful rule all creatures live in peace, of one mind.
The veḷḷam is a vast number. The commentary sets out the traditional scale of army units, beginning with a squad of one elephant, one chariot, three horses and five foot soldiers and multiplying up through many named stages to the veḷḷam.