கம்பராமாயணம் 3920 · கிட்கிந்தா 3.48

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
-
-
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மெய்க்கொள் வாலினால் , மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர் படுத்த நாள் ,
புக்கு இலாத - வெம் பொழி அரத்தம் நீர்
உக்கு இலாத - வேறு உலகம் யாவதோ .

பொருள் · Meaning in Tamil

மெய்க் கொள் வாலினால் - தன் உடம்பில் உள்ள வாலினால்; மிடல் இராவணன் - வலிமை மிக்க இராவணனின்; தொக்க தோள் - இருபதாகச் சேர்ந்து விளங்கிய தோள்களை; உற - ஒரு சேரப் பொருந்தும்படி; தொடர்ப்படுத்த நாள் - கட்டிப் பிணித்த அந்நாளில்; புக்கிலாதவும் - அவன் செல்லாததும்; பொழி அரத்த நீர் - அவ் இராவணன் உடம்பினின்று சொரிந்த இரத்த வெள்ளம்; உக்கிலாத - சிந்தாததும் ஆகிய; வேறு உலகம் யாவதோ - வேறு உலகம் யாது உள்ளதோ?

'புக்கிலாத உலகம், அரத்த நீர் உக்கிலாத உலகம் வேறு யாவது' என்ற வினா. யாதும் இல்லை என்ற மறுதலைப் பொருளைத் தந்தது. நீர்ப்பொருள் ஒற்றுமைப்பற்றி 'அரத்த நீர்' எனப்பட்டது. வாலில் கட்டுண்ட இராவணன் வாலி சென்ற எல்லா உலகங்களிலும் புகுந்தான். அவன் குருதி எல்லா உலகங்களிலும் சிந்தியது என்பதாம். இதனால் இராவணனை வென்ற வீரமுடையவன் வாலி என்பது பெறப்பட்டது. சிவபூசை செய்து கொண்டிருந்த வாலியை இராவணன் பின்புறமாக வந்து பற்ற எண்ணியபோது, வாலி அவனை வாலினால் கட்டிக் கொண்டு எல்லா உலகங்களிலும் அவன் இரத்தம் சிந்துமாறு சுற்றிவந்து, பின்னர் அவன் வருந்தி வேண்டியதால் விடுத்தான் என்பது வரலாறு. இராவணன் வாலியின் வாலில் கட்டுண்ட நிலையை 'ஓர் இராவணன் என்பான் தன்னை, சுந்தரத்தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி, சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்' (6997) என்ற அடிகளும் இதனை உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "On the day when, with the tail that is part of his body, he bound
  2. mighty Irāvaṇaṉ with all his massed shoulders pressed together,
  3. what world is there that he was not carried into,
  4. where his hot blood did not pour and spill?"

What the poem says

Aṉumaṉ recalls Vālī's victory over Irāvaṇaṉ. While Vālī was absorbed in worshipping Civaṉ, Irāvaṇaṉ crept up behind him to seize him; Vālī caught him in his tail, binding all twenty of his arms together, and leapt from world to world with him dangling, until there was no world where Irāvaṇaṉ's blood had not been spilt.

He let him go only when Irāvaṇaṉ begged for release. Vālī has thus defeated the very demon Irāmaṉ must face.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'meykkoḷ vāliṉāl, miṭal irāvaṇaṉ
tokka tōḷ uṟat toṭarppaṭutta nāḷ,
pukkilāta - vem poḻi aratta nīr
ukkilāta - vēṟu ulakam yāvatō.