கம்பராமாயணம் 3921 · கிட்கிந்தா 3.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மொய்ம்பினோய் - வலிமை உடையவனே! இந்திரன் தனிப் புதல்வன் - இந்திரனின் ஒப்பற்ற மைந்தனாகிய அவ்வாலி; இன் அளிச் சந்திரன் - இனிமையும் குளிர்ச்சியும் கொண்ட சந்திரன்; தழைத்தனைய தன்மையான் - அனைத்துக் கலைகளுடன் வளர்ச்சி பெற்றது போன்ற வெண்ணிறத்தை உடையவன்; அந்தகன் தனக்கு - யமனுக்கும்; அரிய ஆணையான் - கடத்தற்கரிய ஆணையை இடுபவன்; இவனின் - இந்தச் சுக்கிரீவனுக்கு; முந்திவந்தனன் - முன்னே தமையனாகப் (ஒரு தாய் வயிற்றில்) பிறந்தவன்.
இதனால் வாலியின் மேனிநிறத்தையும், ஆணைச் சிறப்பையும் உணர்த்தினான். எமனும் வாலியின் ஆணை வழியன்றிச் செயல்படான் என்பதால் வாலியின் ஆற்றல் புலப்பட்டது. வாலி சுக்கிரீவர்க்குத் தாய் ஒருத்தி; தந்தையர் இந்திரனும் சூரியனுமாகிய இருவர். அந்தகன் தனக்கும் - உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; தழைத்தனைய என்பதை தழைத்தாலனைய என எச்சத் திரிபாகவாவது; தழைத்ததனைய என்பதன் விகாரமாகவாவது கொள்க. தம் வரலாற்றைத் தாமே கூறிக் கொள்வது தகுதியன்று என்று கருத்துடன், இராமபிரான் வரலாற்றை இலக்குவன் வாயிலாகவும், சுக்கிரீவன் வரலாற்றை அனுமன் வாயிலாகவும் கம்பர் அமைத்துள்ள நயம் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Intiraṉ's matchless son, who is like the sweet, cool
- moon grown to its fullness,
- whose command even Yama cannot defy,
- was born before this one, O mighty one!"
What the poem says
Aṉumaṉ finally names the relationship: this mighty Vālī, Intiraṉ's son, white and radiant as the full moon, whose command even Yama, the god of death, cannot disobey, is Cukkirīvaṉ's elder brother. The two had one mother but different divine fathers, Intiraṉ and the Sun.
The commentary notes the poet's care: just as Ilakkuvaṉ told Irāmaṉ's story, Aṉumaṉ tells Cukkirīvaṉ's, since it is unseemly to tell one's own.