கம்பராமாயணம் 3923 · கிட்கிந்தா 3.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முட்டி நின்று - (அவ்வரக்கன்) அவ்வாறு வாலியோடு எதிர்த்துப் போர் செய்த; அவன் முரண் உரத்தின் நேர் - அவனது வலிய ஆற்றலுக்கு எதிரில்; ஒட்ட அஞ்சி - நின்று போர்செய்வதற்கு அஞ்சி; நெஞ்சு உலைய ஓடினான் - மனம் நடுங்கத் தப்பி ஓடினான்; வட்ட மண்டலத்து - வட்ட வடிவமாகிய பூமியில்; வாழ்வு அரிது - உயிர் வாழ்தல் அரிது; எனா - என்று எண்ணி; எட்ட அரும் பெரும்பிலனுள் - எவரும் செல்லுதற்கரிய பெரிய பிலத்துவாரத்துள்; எய்தினான் - புகுந்தான்.
வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். மாயாவி நுழைந்த பிலத்தின் அருமை புலப்பட 'எட்டரும் பெரும்பிலன்' என்றான். பிலம் - பூமிக்குள் செல்லும் சுரங்கவழி. பிலன் - பிலம் என்பதன் ஈற்றுப்போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Having closed in to fight, afraid to stand against
- Vālī's fierce strength, he fled with trembling heart,
- saying, 'There is no living on this round earth,'
- and went into a great cavern no one could reach."
What the poem says
The demon soon found Vālī's strength too much for him. Terrified, he broke off the fight and fled, thinking there was no safe place left for him on the face of the earth, and dived into a vast underground cavern that no one could reach.