கம்பராமாயணம் 393 · பால 7.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கறங்கு அடல் திகிரிப்படி காத்தவர் - எங்கும் சுழன்று வரும் ஆணையாகிய சக்கரம் செலுத்தி உலகைக் காத்தவர்; பிறங்கடை பெரியோய் - மரபில் வந்த பெரியோனே! மறம் கொடு பெரியோரொடும் - பாவச் செயலை மேற்கொண்டு, பெரியோர்களாகிய முனிவரோடும்; இத்தரை மன் உயிர்மாய்த்து நின்று - இப்பூமியில் உள்ள உயிர்களை எல்லாம் அழித்து நின்று; அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ - அறத்தை அழித்தவளாகிய இவளுக்கு ஆண்வடிவம் வேண்டுவதோ!
கறங்குதல்: சுழல்தல். திகிரி: ஆணையாகிய சக்கரம். படி: நிலம். காத்தவர்: சூரிய குலத்தரசர்கள். பிறங்கல்: விளங்கல். மறம்: பாவம். அடைபெரியோய்; வினைத்தொகை. மன்னுயிர்: நிலைபெற்ற உயிர்கள். மாய்த்து: அழித்து. ஆண்மை: இங்கு ஆண்வடிவத்தை உணர்த்திற்று. சூரிய குலத்தரசர் மேலும் விளக்கமுறவந்து தோன்றிய ராமனைப் 'பெரியோய்' என்றார் பெண் உருவிலே இத்தனை பேரழிவு செய்து அறம்கெடுத்த இவளுக்கு ஆண் உருவம் வேண்டுமோ? வேண்டுவதில்லை என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Great one, born in the line of those who guarded the earth
- with the mighty whirling wheel of command! For her who, with violence,
- has killed the lives of this land, sages and all, and stands there
- having destroyed dharma, must she also have a man's form?
What the poem says
Vicuvāmittiraṉ addresses Irāmaṉ as the great heir of the Solar kings, who protected the world with the ever-turning wheel of their authority.
Tāṭakai has killed the sages and every creature in the land and wrecked the moral order. Does she need to be male before she can be treated as a warrior's enemy? Her deeds, not her form, decide what she deserves.