கம்பராமாயணம் 3949 · கிட்கிந்தா 3.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய- தலைவனே! முன்பு - முன்னே (அக்காலத்தில் யான் என் தந்தையை நோக்க); தோன்றலை அறிதற்கு - அப்பெருமானை நான் அறிந்து கொள்வதற்கு; முடிவு என்- உறுதியான உபாயம் யாது? என்று இயம்ப - என்று கேட்க; எவர்க்கும் துன்பு தோன்றிய பொழுது - (அவற் "யாவர்க்கும் துன்பம் ஏற்படும் காலத்தில்; உடன் தோன்றுவன் - உடனே அத்துன்பம் தீர்க்க எதிரில் வந்து தோன்றுவான்; அன்பு சான்று - அப்பரமனைக் கண்டதும் உனக்கு அவன்மாட்டு அன்பு உண்டாவதே தக்க சான்றாகும்" என உரைத்தனன் - என்று சொன்னான்; என் யாக்கை - (அதற்கேற்ப இப்பெருமானைக் கண்ட மாத்திரத்தில்) என் உடல்; என்பு தோன்றல - எலும்புகள் உருத் தோன்றாதனவாக, உருகின எனில் - உருகின என்றால்; பிறிது எவனோ - இதற்கு மேல் வேறு சான்று எதற்கு?
முன்னர்ச் செய்யுளில் 'இதற்கு ஏது உண்டு' என்று கூறியதன் விளக்கம் இங்குத் தரப்பட்டுள்ளது. வாயுதேவன் கூறியபடி இராமனைக் கண்டவுடன் அனுமனின் எலும்பு உருகியதால் இராமன் திருமாலே எனத் துணியலாம் என்பது அனுமனின் கருத்தாகும். இதற்குமேல் ஆதாரம் வேண்டுவதில்லையாதலின் 'பிறிது எவனோ?' என்றான். உலகில் துன்பங்கள் தோன்றுகையில் அவன் உடனே அவதரிப்பான் என்பது புலப்பட 'உடன் தோன்றுவன்' என்றான். துன்பம் ஏற்படுகையில் கடவுளின் திருவருள் கிட்டும் என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது. என்பு தோன்றல உருகின- எலும்பு வலுவானது. அவை வலிமை தோன்றாமல் உருகின போல உடல் நெகிழ்ந்தது என்பதாம். அனுமனுக்கு இவ்வுணர்ச்சி இராமனைக் கண்டவுடன் ஏற்பட்டதை 'என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவில் காதல்' (3763) என்ற கூற்றாலும் உணரலாம். இராமனைக் கண்ட அளவில் "என்பு உருகி நெஞ்சு உருகி, யார் உருக கில்லார்" (1588) என மக்கள் உருகி நின்றனர் இங்ஙனமே வீடணனும் இராமனை எண்ணிய மாத்திரத்தில் 'என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன் புன்புறப் பிறவியின் பகைஞன் போலும்' என (6384) உருகி நின்றான். உள்ளம் உருகுங்கால் 'என்பு உருகுதல்' இயல்பாதலின் 'என்பு தோன்றல்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'When sorrow arises for anyone, he will appear at once.'
- When I asked, 'Before that, what is the sure way to know that lord?',
- he answered, 'Love is the witness.' Sir, if my body
- has melted so that its bones no longer show, what other proof is needed?"
What the poem says
This is the proof Aṉumaṉ promised. His father told him that the Lord appears whenever there is suffering, and that he would know him by the love that wells up on seeing him. On first seeing Irāmaṉ, Aṉumaṉ felt his whole body melt, as if even the bones had dissolved. Melting of the bones is the poet's recurring image for overwhelming devotion; the townspeople and later Vīṭaṇaṉ feel the same on seeing or thinking of Irāmaṉ.