கம்பராமாயணம் 3950 · கிட்கிந்தா 3.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெரியோய் - சுக்கிரீவப் பெரியோனே! பிறிதும்- மற்றும்; அன்னவன் பெருவலி ஆற்றலை - அந்த இராமனுடைய பெரிய வலிமைச் சிறப்பை; அறிதி என்னின் - அறிய விரும்புவாயானால்; உபாயமும் உண்டு - அதற்கு ஒரு வழி உள்ளது.; அஃது - அவ் உபாயமாவது; நெறியில் நின்றன - நாம் போகும் வழியில் நிற்பனவான; அருமரங்கள் ஏழில் - எய்துதற்கரிய மராமரங்கள் ஏழில்; ஒன்று உருவ - ஒன்றைத் துளைக்கும்படி,; இந்நெடியோன் - இந்த நெடியோனாகிய இராமனது; பொறி கொள் வெஞ்சரம் - நெருப்புப்பொறி கொண்ட கொடிய அம்பொன்று; போவது காண் - செல்வதே ஆகும்; எனப் புகன்றான் - என்று சொன்னான்.
மராமரங்கள் ஏழில் ஏதேனும் ஒரு மரத்தை ஊடுருவும் ஆற்றல் இராமன் அம்புக்கு உண்டாயின், அவ்வம்பு வாலியின் மார்பைத் துளைக்கும் ஆற்றலை உடையது என்பதைத் தெளியலாம் என்று சுக்கிரீவன் தெளியுமாறு சிறந்த உபாயத்தை அனுமன் உரைத்தனன். வலியாற்றல் - ஒரு பொருட்பன்மொழி;
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Besides, great one, if you would know
- his mighty strength, there is a way: of the seven rare trees
- that stand on our path, let this tall one's fiery, fierce arrow
- go through one, and see!" he said.
What the poem says
Aṉumaṉ proposes a test. Seven huge marā trees (sal trees) stand nearby. If Irāmaṉ's arrow can pierce even one of them, Cukkirīvaṉ can be sure it will pierce Vālī's chest. This test gives the next episode its name.