கம்பராமாயணம் 395 · பால 7.65

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன்னும் பல் உயிர்வாரி - உலகில் நிலைபெற்றுள்ள பல உயிர் வகைகளையும் அள்ளி எடுத்து; தன்வாய் பெய்து தின்னும் - தனது வாயில் போட்டுத் தின்னுகின்ற; புன்மையின் தீமை எதோ - புன்மையான தீமை வேறு எது உண்டு; ஐய! பின்னும் தாழ்குழல் பேதைமைப் பெண் இவள் என்னும் தன்மை - தலைவ! அப்படியிருந்தும் தாழ்ந்த கூந்தலை உடைய பேதைத்தன்மை வாய்ந்த பெண் இவள் என்று நினைக்கும் தன்மை; எளிமையின் பாலதே - இகழ்ச்சிக்கு உரியதாம்.

மன்னும்: நிலைத்திருக்கும். வாய்ப்பெய்து: வாயில்கொட்டி. புன்மை: புல்லியதன்மை. தீமை: தீயதொழில். ஐய: தலைவனே. தாழ்குழல்: வினைத் தொகை. பேதைமை: மனமிரங்கும் தன்மை. 'பேதைமை என்பது மாதர்க் கணிகலம்' என்பதை நினைவு கூர்க. எளிமை: இகழ்ச்சி. இவளைப் பெண் என்பது இகழ்ச்சிக்குரியது என்பது கருத்து. பாலது: தன்மையது: உயிர்களைக் கொன்று தின்பதைவிட தீயசெயல் எது உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது இகழ்ச்சிக்குரியதேயாகும் என்பது கருத்து. எளிமை: அறியாமையுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What evil is there worse than the baseness of scooping up
  2. the many enduring lives, pouring them into her mouth and eating them? Sir,
  3. to think of her, even so, as a gentle woman with long braided hair
  4. belongs to foolishness.

What the poem says

Vicuvāmittiraṉ asks what crime could be lower than scooping up living creatures by the handful and eating them.

To picture such a being as a soft-hearted woman with long braided hair, the conventional image of feminine gentleness, is simple naivety. Tenderness of heart, an old saying goes, is a woman's ornament, and Tāṭakai has none of it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṉṉum pal uyir vārit taṉ vāyp peytu
tiṉṉum puṉmaiyiṉ tīmai etō? aiya!
piṉṉum tāḻ kuḻal pētaimaip peṇ ivaḷ
eṉṉum taṉmai eḷimaiyiṉ pālatē!'