கம்பராமாயணம் 3978 · கிட்கிந்தா 5.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூலமே - (அது கேட்ட சிவபிரான்) பண்டு தொட்டே, வீரமே மூடினாயோடு - வீரச் செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் உன்னோடு; போர் ஏலுமே - போரிடுவது முடியுமா? (முடியாது); தேவர் பால் ஏகு - (ஆதலால்) நீ தேவர்களிடம் போர் செய்யப் போவாயாக; எனா ஏவினான் - என்று சொல்லி அனுப்பினான்; வான் உளோர் வான் உளான் - (அவனும் சென்று தேவர்களைப் போருக்கு அழைக்க) அந்தத் தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்; சால நாள்- (துந்துபியிடம்) 'நீ நீண்டகாலம்; போர் செய்வாய் ஆதியேல்- போர் செய்ய விரும்புவாயாயின்; சாரல் - இங்கு வராதே; போர் வாலி பால் ஏகு - போர் செய்வதில் வல்ல வாலியிடம் செல்வாய்; எனா - என்று. ...
எனா என்பது அடுத்த பாடலில் 'விட' என்பதோடு முடியும். ஏலுமே - ஏகாரம் எதிர்மறை. சிவபிரான் துந்துபியைத் தேவர்களிடம் அனுப்பத் தேவர் தலைவனாம் இந்திரன் அவனை வாலியிடம் அனுப்பிவைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'Can anyone fight with you, steeped in valour from the very start?
- Go to the gods,' Śiva said, and sent him off; and the lord of those in heaven
- said, 'If you would fight for many days, do not come here; for battle,
- go to Vālī.'"
What the poem says
Śiva too passes him on, with mock praise: who could fight someone so full of valour? He sends Tuntupi to the gods. Their king Intiraṉ in turn tells him that if he wants a long fight, Vālī is the one to go to. The sentence runs on into the next verse.