கம்பராமாயணம் 398 · பால 7.68

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கங்கைத் தீம் புனல் நாடன் கருத்து எலாம்
மங்கைத் தீ அனையாளும் மனம் கொளா,
செம் கை சூல வெம் தீயினைத் தீய தன்
வெம் கண் தீயொடு மேல் செல வீசினாள்.

பொருள் · Meaning in Tamil

கங்கைத் தீம்புனல் நாடன் கருத்தை - கங்கையின் இனிய நீர் பாய்ந்து வளப்படுத்தும் கோசல நாட்டை உடைய இராமபிரானது எண்ணத்தை; அம்மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா - அந்த நெருப்பைப் போன்ற தாடகையை மனத்தில் கொண்டு; செங்கைச் சூல வெம்தீயினை - தனது சிவந்த கையிலுள்ள சூலமாகிய கொடிய நெருப்பினை; தன் வெம் கண்தீயொடு - தனது கொடிய கண்களிலிருந்து சொரியும் நெருப்புடன்; மேல்செல வீசினாள் - ராமன் முதலிய மூவர் மேலும் சென்று படும்படி எறிந்தாள்.

தீம்புனல்: இனிய நீர் புனல்நாடு: மருதநிலம். தன் கண் தீயுடன் எறியும் தாடகையின் சூல வெந்தீயினை அவிக்கும் ஆற்றலுடைய இராமனது சிறப்புத் தோன்ற “கங்கைத் தீம்புனல் நாடன்” என்றார். நாடன்: நாட்டை உடையவன். உயிர்களைக் கொல்வதால் ரத்தக்கறை படிந்த கைகளை உடையவளாதலின் “செங்கை” என்றார் கொளா: கொண்டு (செயா என்ற வாய்பாட்டு வினைஎச்சம். செம்மை: சிவப்புமாம். வெம்மை: வெப்பம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The intent of the lord of the land of the Gaṅgā's sweet waters
  2. that fire of a woman also grasped in her mind,
  3. and she hurled the fierce fire of the trident in her red hand
  4. together with the fire of her cruel eyes, to fly at them.

What the poem says

Tāṭakai senses that Irāmaṉ has resolved to kill her and strikes first. She throws her trident, itself like fire, along with the fire blazing from her eyes, straight at the three.

Irāmaṉ is called lord of the land watered by the sweet Gaṅgā: cool water against her fire, hinting that he will quench it. Her hand is "red" because it is stained with the blood of her victims.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṅkait tīm puṉal nāṭaṉ karuttai am
maṅkait tī aṉaiyāḷum maṉakkoḷā,
ceṅ kaic cūla ven tīyiṉai, tīya taṉ
veṅ kaṇ tīyoṭu mēṟcela vīciṉāḷ.