கம்பராமாயணம் 399 · பால 7.69

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புதிய கூற்று அனையாள் - புதிய எமனைப் போன்றவளாகிய தாடகை, புகைந்து ஏவிய கதிர்கொள் மூவிலைக் காலவெம்தீ - கோபித்து வீசிய ஒளிபொருந்திய இலை போலும் மூன்று முனைகளை உடைய பகைவர்களுக்கு இறுதிக் காலம் தரும் கொடிய தீயாகிய அந்தச் சூலமானது; முனி விதியை மேற்கொண்டு நின்றவன்மேல் - முனிவனது கட்டளையை மேற்கொண்டு நின்ற இராம பிரான்மீது; உவாமதியின் மேல்வரு கோள் எனவந்ததே - முழுமதியின் மேல் வரும் இராகு என்னும் கோள் போலப் பாய்ந்து வந்தது.

முன்பு “நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பதோர் கூற்றுண்டே” எனக் கூறியதற் கேற்ப, இங்குப் “புதிய கூற்றனையாள்” என்றார் முன்பு “செங்கைச் சூல வெந்தீ” என்றதற்கேற்ப “மூவிலைக் காலவெந்தீ” என்றார். கதிர்: ஒளிக்கற்றை. விதி: கட்டளை. உவாமதி: முழுமதி. “கோள்” எனப் பொதுவாகக் கூறினாலும் ராகு என்னும் கோளே மதியைப் பிடிப்பாதலின் இங்கு “ராகு” என்று பொருள் கூறப்பட்டது. காலம்: உயிர்களுக்கு இறுதிசெய்யும் காலமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gleaming three-bladed fire of death
  2. that she, like a new Death, had hurled in smouldering rage,
  3. came at him who stood having taken on the sage's command,
  4. as the eclipse-planet comes upon the full moon.

What the poem says

The trident flies at Irāmaṉ, who stands ready to carry out the sage's order. Tāṭakai is again called "a new Death," echoing the sage's earlier words, and the trident with its three leaf-shaped blades is a fire that brings the end.

It rushes at Irāmaṉ the way Rāhu, the shadow-planet thought to cause eclipses, swoops on the full moon. The image casts Irāmaṉ as the bright, calm moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1putiya kūṟṟu aṉaiyāḷ pukaintu ēviya
katir koḷ mūvilaik kāla ven tī, muṉi
vitiyai mēṟkoṇṭu niṉṟavaṉmēl, uvā
matiyiṉmēl varum kōḷ eṉa, vantatē.