கம்பராமாயணம் 400 · பால 7.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் - திருமாலின் அவதாரமான ராமபிரான் அக்கணமே அம்பைத் தொடுத்ததும்; கோல வில் கால் குனித்ததும் - அழகிய தனது வில்லின் நுனியை வளைத்ததும் ஆகிய செயல்களை; கண்டிலர் - விண்ணகத்துத் தேவரும் மண்ணில் நின்ற முனிவரும் கண்டாரிலர்; காலனைப் பறித்து அக்கடியாள் விட்ட - யமனை அவன் இடத்திலிருந்து பறித்துச் சூலவடிவாக்கி அக்கொடிய அரக்கி வீச அந்த; சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர் - சூலம் சிதைந்துபோய்ப் பலதுண்டங்களாக வீழ்ந்ததைப் பார்த்தனர்.
மால்: அழகு. இங்குத் திருமாலின் அம்சமான ராமனைச் சுட்டியது. வாளி: அம்பு. தொட்டது: தொடுத்தது. கோலம்: அழகு. வில்கால்: வில்லின் முனை. குனித்தல்: வளைத்தல். காலன்: எமன். பறித்தல்: எடுத்தல். கடியாள்: கடுமை உடையவள். அற்றன: வினையாலணையும் பெயர் பகுதி இரட்டித்துக் காலம் காட்டியது. துண்டம்: துண்டிக்கப்பட்ட சிறுபகுதி. தாடகை ஏவிய சூலத்தை ராமன் அழித்தமை கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- No one saw the moment when Māl fitted the arrow,
- nor when he bent the tip of his beautiful bow;
- they saw only the pieces, cut apart, of the trident
- that the cruel one had wrenched from Death and hurled.
What the poem says
Irāmaṉ, who is Viṣṇu (Māl) in human form, acts so fast that neither the gods watching from above nor the sages on the ground see him draw an arrow or bend his bow.
All anyone sees is the result: Tāṭakai's trident, a weapon as if she had snatched it from Death himself, lying cut into pieces. The speed of the hero's archery is a recurring theme in Kampaṉ.