கம்பராமாயணம் 401 · பால 7.71

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லின் மாத்திரையில் கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கை வகுத்தாள்; அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்.

பொருள் · Meaning in Tamil

அல்லின் மாரி அனைய நிறத்தவள் - இருட்டில் பெய்யும் மழை போன்ற கரிய நிறம் கொண்ட தாடகை, சொல்லும் மாத்திரையின் - ஒரு சொல் சொல்லும் கால அளவிலேயே; கடல் தூர்ப்பதோர் கல்லின் மாரியை - கடலையும் தூர்த்துவிடக் கூடியதான கற்களை மலைபோல; கைவகுத்தாள் - கைகளால் எடுத்து வீசினாள்; அது வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் - அதனைத் தனது வில்லிலிருந்து பொழியும் அம்பு மழையினால் வீரனாகிய ராமன் விலக்கலானான்.

அல்: இருட்டு. மாரி: மழை. இருட்டில் பெய்யும் மழை. அல்லது இருளாகிய மழை எனவும் தகும். தாடகையின் கரிய நிறத்தை இவ்வாறு கூறினார். மாத்திரை: கால அளவு. கைவகுத்தல்: கைக்கடுமை காட்டல். “வில்லின் மாரி” இதில் 'மாரி' உவமை ஆகு பெயராய் அம்புகளை உணர்த்தும். வீரன்: வீரம் மிக்கவன். தாடகையின் கொடிய தோற்றம் கண்டும் அவளது போர்ச்செயல் கண்டும் வீரத்துடன் போர் புரியும் திறத்தைக் காட்டும். தாடகையின் கல் மழையை இராமபிரானது அம்புமழை தடுத்தது என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She whose colour was like rain falling in the dark
  2. in the time it takes to say a word, let fly a rain of stones
  3. that could fill up the sea; that
  4. the hero warded off with a rain from his bow.

What the poem says

With her trident gone, Tāṭakai, black as a storm at night, hurls a torrent of rocks, enough to fill the ocean, in less time than it takes to speak a word.

Irāmaṉ meets this rain of stones with a rain of arrows and turns all of it aside.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1alliṉ māri aṉaiya niṟattavaḷ,
collum māttiraiyiṉ kaṭal tūrppatu ōr
kalliṉ māriyaik kaivakuttāḷ; atu
villiṉ māriyiṉ vīraṉ vilakkiṉāṉ.