கம்பராமாயணம் 402 · பால 7.72

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே ஏ.

பொருள் · Meaning in Tamil

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் - நிறைமொழி மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை, கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் - கரிய நிறமும், அழகும் உடைய இராமபிரான் இருள் போன்ற நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி விடவே; வயிரக் குன்றக்கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது - (அந்த அம்பு) வைரம் பாய்ந்த கல்போன்ற அத்தாடகையின் நெஞ்சில் தங்கியிராமல்; அப்புறம் கழன்று - (நெஞ்சில் பாய்ந்து) பின் முதுகின் புறமாகக் கழன்று; கல்லாப்புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என - கல்வி அறிவில்லாத புன்மையாளருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல; போயிற்று - ஓடிப்போய்விட்டது.

“சொல்” என்று பொதுவாகக் கூறினாலும், நிறை மொழி மாந்தரின் மறை மொழியையே குறித்து நின்றதென்க. - உறுதி. சுடுசரம்: சுடுகின்ற அம்பு. இராமனுடைய அம்புக்குக் கடுமை, வேகம், அருமை ஆகிய பண்புகள் உண்டாம் என்பதை உணர்த்தினார். கரிய செம்மல்: கருநில அழகன். அல்: இருட்டு. இராமனது அம்பு மார்பில் புகுந்து, முதுகின்புறம் போந்தது என்பதை உணர்த்த “அப்புறம் கழன்று” என்றார். கல்வியறிவில்லாத கீழோருக்கு அறிவாற்றல் மிக்க மேலோர் கூறும் அறம் உள்ளத்தில் நிலை பெறாது ஒரு காதில் புகுந்து மறுகாது வழிப்போவதுபோல, தாடகையின் முதுகுப்புறம் ராமனது அம்பு விரைந்து சென்றது என்ற உவமை நயம் உணரத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the dark lord loosed a burning arrow, fierce and swift as a word of power,
  2. at her whose colour was like night, it did not stay
  3. in her heart, hard as stone from a diamond hill, but slipped out the other side
  4. and went on, like the meaning good men speak to the unlearned and base.

What the poem says

Irāmaṉ finally shoots at Tāṭakai herself. His arrow is as swift and unfailing as the curse of a sage whose words always come true.

It goes clean through her stone-hard chest and out of her back without stopping. The poet's simile is pointed: just as good advice given to an ignorant, mean person goes in one ear and out the other without taking hold, the arrow passes straight through her heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1col okkum kaṭiya vēkac cuṭu caram, kariya cemmal,
al okkum niṟattiṉāḷmēl viṭutalum, vayirak kuṉṟak
kal okkum neñcil taṅkātu appuṟam kaḻaṉṟu, kallāp
pullārkku nallōr coṉṉa poruḷ eṉa, pōyiṟṟu aṉṟē.