கம்பராமாயணம் 403 · பால 7.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன் நெடும் குன்றம் அன்னான் - நீண்டு, உயர்ந்த பொன் மலையாகிய மேருமலையைப் போன்ற சலியாத தன்மை வாய்ந்த இராமபிரானது; புகர்முகப் பகழி என்னும் - முன்புறம் புள்ளிகளையுடைய அம்பு என்ற; அ நெடும் கால வன் காற்று - நெடிய, கடையூழிக் காலத்து வலியகாற்று; அடித்தலும் - அடித்த உடனே; இடித்து வானில் கல்நெடுமாரி பெய்ய - வானத்தே இடி முழக்கம் செய்து கல்மழை பெய்வதற்காக; கடையுகத்து எழுந்த மேகம் - யுகத்தின் கடைசியில் எழுந்த மேகமானது; மின் ஓடும் அசனியோடும் - மின்னலோடும், இடியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் - வீழ்வது போல, தாடகை வீழ்ந்தாள்.
கரிய நிறத்தினனான ராமனைப் “பொன் நெடுங்குன்றம்” என்றது நிறம் கருதியன்று. சலியாத்தன்மை கருதியே யாகும். புகர்: புள்ளி. முகம்: முன்புறம் பகழி: அம்பு. கடையுகம்: யுகக்கடை. சொல்மாற்று. மேகம். புயல். தாடகைக்கு மேகம் உவமை. அவளது கூந்தலும் குரலும் மின்னலும் இடியும் போன்றவை என்க. இராமபிரானது அம்பாகிய கால வன் காற்று அடித்ததும், இடி, மின்னலோடு கூடிய ஊழிக் காலத்து மேகம் வீழ்வது போல, தாடகை வீழ்ந்தாள் என்க
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the arrow with its spotted head, shot by him who was like the tall golden mountain,
- struck like the great, fierce wind at the end of time, she fell,
- as a cloud that rose at the close of the age to thunder in the sky
- and pour a long rain of stones falls with its lightning and thunderbolts.
What the poem says
Tāṭakai collapses. Irāmaṉ is compared to Mēru, the golden mountain, not for his colour (he is dark) but for his unshakable steadiness. His arrow is the hurricane that blows at the end of an age.
She falls like the huge storm-cloud that gathers at doomsday to rain down stones, crashing to the ground with its lightning and thunder. Her flashing hair and booming voice are that lightning and thunder.