கம்பராமாயணம் 404 · பால 7.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொடி உடைக் கானம் எங்கும் - புழுதி நிறைந்த அந்தக் காடெல்லாம்; குருதிநீர் பொங்க வீழ்ந்த - இரத்தம் நிறைந்து பொங்கும்படி வீழ்ந்த; தடிஉடை எயிற்றுப் பேழ்வாய்த் தாடகை - தடித்த உடலும் கோரைப் பற்களும் குகை போன்ற வாயும் கொண்ட தாடகை என்னும் அவ்வரக்கி; தலைகள் தோறும் முடியுடை அரக்கற்கு - தலைகள் தோறும் மணிமுடியை உடைய பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணனுக்கு; முந்தி உற்பாதம் ஆக - பின்னால் அழிவதற்கு முந்திய கேடுகால அறிகுறியாக, அந்நாள் படியிடை இற்று வீழ்ந்த - அந்த நாளில் பூமியில் ஒடிந்து வீழ்ந்த; வெற்றி அம் பதாகை ஒத்தாள் - வெற்றிக் கொடியை ஒத்திருந்தாள்.
பொடி: புழுதி. கானம்: காடு. குருதிநீர்: இரத்தம். தடியுடை எயிறு: பற்களிடையே புலால் துண்டுகள் சிக்கியிருக்கும். பேழ்வாய்: திறந்தவாய். உற்பாதம்: கெடுங்கால அறிகுறி. அழிவுக் காலத்தின் முன்அறிகுறி. தடித்த உடலை உடைய தாடகை வீழ்ந்தது - இராவணனது வெற்றிக் கொடி ஒடிந்து வீழ்ந்ததை ஒத்திருந்தது என்பது கருத்து. இது தற்குறிப்பேற்ற அணி!
ஆங்கிலம் · English translationAI
Translation
- Tāṭakai, with flesh caught in her fangs and her gaping mouth, who fell
- so that blood welled up all over the dusty forest,
- was like the fine victory banner of the Rākṣasa crowned on every head,
- snapped and fallen to earth that day as an omen ahead of time.
What the poem says
Tāṭakai lies dead in a flood of blood that soaks the dusty forest. Her huge body, fanged mouth still gaping, looks like the victory banner of ten-crowned Irāvaṇaṉ, broken and thrown to the ground.
The poet presents her fall as an omen, the first sign of the ruin that will one day overtake Irāvaṇaṉ himself. The commentary names this as poetic fancy, reading a meaning into what is seen.