கம்பராமாயணம் 4047 · கிட்கிந்தா 7.25

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

தையல் - (அதற்கு வாலி) பெண்ணே! மூன்று என முற்றிய - மேல், கீழ், நடு என மூன்றாக வகுக்கப்பெற்றுள்ள; முடிவு இல் பேர் உலகு - எல்லையற்ற பெரிய உலகங்கள் யாவும்; ஏன்று உடன் உற்றன - தம்முள் இயைந்து ஒன்று சேர்ந்தனவாய்; எனக்கு நேர் என - எனக்குப் பகையாக; தோன்றினும் - எதிர்த்து வந்து தோன்றினாலும்; அவை தோற்றுத்தொலையும் - அவையெல்லாம் தோற்று அழியும்; என்றலின் - என்று கூறுவதற்கு; சான்று உள - சான்றுகள் பல உள்ளன; அன்னவை - அவற்றை; கேட்டி - கேட்பாயாக!

தையல் - அழகுடையவள்; அண்மை விளி; உலகு - இடவாகுபெயரால் அங்குள்ள உயிர்களைக் குறித்தது. கேட்டி - முன்னிலை ஒருமை; ஆல் அசை. வாலியின் போர்ச்செயலைக் கண்டு அறியும் வாய்ப்பில்லாதவளாய் கேள்வி மாத்திரத்தால் அறிந்தவளாதலின் 'கேட்டி' என வாலி உரைக்கலாயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even if the boundless great worlds, complete as three,
  2. joined together and rose up as one to face me,
  3. they would be beaten and destroyed; for this
  4. there is proof; hear it, my lady."

What the poem says

Vālī answers Tārai. Even if all three worlds, the upper, the middle and the lower, united against him, they would lose. He offers to prove it with deeds from his past.

He says "hear" because Tārai never saw his great battles herself and knows them only from report. The next verses tell the story he means.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mūṉṟu eṉa muṟṟiya muṭivu il pēr ulaku
ēṉṟu uṭaṉ uṟṟaṉa eṉakku nēr eṉat
tōṉṟiṉum, tōṟṟu avai tolaiyum eṉṟaliṉ
cāṉṟu uḷa; aṉṉavai taiyal kēṭṭiyāl. '