கம்பராமாயணம் 411 · பால 8.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனையன நிகழ்ந்த பின்னர் - இவையெல்லாம் நடந்த பின்பு காவதம் இரண்டு சென்றார் - இராமன் முதலிய மூவரும் இரண்டு காததூரம் நடந்து சென்றனர்; ஆண்டு அனையவர் கேட்க - அங்கு அந்த மூவரும் கேட்கும்படியாக; ஓர் அரவம் வந்து அணுகித்தோன்ற - ஒருபெருத்த குரல் பக்கத்தே எழ; முனைவ! ஈது யாவது என்று முன்னவன் வினவ - முனிவரே இந்த ஓலம் எதனால் தோன்றியது என ராமன் கேட்க; பின்னர் வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பல் உற்றான் - பின்பு, இரு வினையும் நீங்கத் தவம் செய்து மாமுனிவனாக நின்ற விசுவாமித்திர முனிவன் சொல்லலானான்.
நிகழ்தல்: நடத்தல். காவதம்: காதம் (பத்து நாழிகைத் தூரம்). அரவம்: பேரொலி. முனைவன்: வினையின் நீங்கி விளங்கிய மேலோன். முனைவன்: மூத்தவன் அனைவருக்கும் முன்னோனான முதல்வன். வினையற: தீவினை நீங்க (இருவினையும் நீங்க). நோற்றல்: நோன்பு. நின்ற: நற்குண நற்பண்புகளில் நிலைத்த. விளம்பல்: சொல்லல். உற்றான்: பொருந்தினான். “உறு” என்று பகுதி இரட்டித்து இறந்த காலம் காட்டிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After these things had happened, they went on two leagues;
- there, so that they heard it, a sound came near and arose;
- Sage, what is this? the elder asked; and then
- the exalted one, who stood having done penance to end all karma, began to speak.
What the poem says
The three walk on about two kātams (a measure of distance). Then a great clamour reaches their ears, and Irāmaṉ, the elder prince, asks the sage what it is. Vicuvāmittiraṉ, whose austerities have freed him from karma, begins to explain.