கம்பராமாயணம் 4204 · கிட்கிந்தா 8.1

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்
முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான்
உதவும் பூமகள் சேர ஒள் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான்.

பொருள் · Meaning in Tamil

புதல்வன் - தன் மகனான சுக்கிரிவன்; பொன் மகுடம் பொறுத்தலால் - (அன்று) பொன்னாலாகிய மணி முடியைத் தரிக்கப் போவதால்; முதல்வன் - (தந்தையான) சூரியன்; பேர் உவகைக்கு முந்துவான் - (அதைக் கண்டு) பெரிதும் மகிழ்ச்சி அடைவதற்கு முற்பட்டவனாம்; உதவும் பூமகள் சேர - (அந்த முடிசூட்டு விழாவிற்கு) உதவியாகின்ற திருமகள் வந்து சேரும்படி; ஒண்மலர்க் கதவம் - (அவள் உறைவிடமான) சிறந்த தாமரை மலர்களின் இதழ்களாகிய கதவுகளை; செய்ய கரத்தில் நீக்கினான் - தனது சிவந்த கதிர்களாகிய கைகளினால் திறந்து விட்டான்.

இரவு கழியக் கதிரவன் இயற்கையாக உதயமாவதை அன்று தன் மகன் மணிமுடி சூட இருப்பதால் முற்பட்டு வந்ததாகவும், தாமரை இயல்பாக இதழ் விரித்தலை, இரவில் குவிந்திருந்த தாமரை மலருக்குள் இருந்த திருமகள் முடி சூடும் கதிரவன் மகனைச் சேர்தற் பொருட்டு அவள் இருந்த தாமரை மலர் வீட்டின் இதழ்க் கதவுகளைத் தன் கரங்களால் திறந்துவிட்டதாகவும் கூறியதால் இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி பொருந்தியது. பொழுது புலரும்போது தாமரை விரிந்தது என்ற எளிய செய்தி கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரின் எழுத்தாணியில் அரிய கற்பனையாகப் புனையா ஓவியமாகத் தீட்டியுள்ள நயம் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because his son was to bear the golden crown,
  2. the First One, hastening to his great joy,
  3. so that the lotus goddess who would help might come to him,
  4. opened with his red hands the doors of the bright flower.

What the poem says

A new canto begins with the coronation of Cukkirīvaṉ. Cukkirīvaṉ is the son of the Sun god, so the poet imagines that the sun rose early that morning in eagerness to see his son crowned.

The lotuses that open at sunrise are explained by a poetic fancy: Lakṣmī, goddess of royal fortune, who dwells in the lotus, was waiting to come to the new king, so the sun opened the petal doors of her flower-house with his red rays, his hands. This is the figure of poetic fancy, a fanciful cause given for a natural event.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1putalvaṉ poṉ makuṭam poṟuttalāl
mutalvaṉ pēr uvakaikku muntuvāṉ
utavum pūmakaḷ cēra oṇ malark
katavam ceyya karattiṉ nīkkiṉāṉ.