கம்பராமாயணம் 4205 · கிட்கிந்தா 8.2

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அது காலத்தில் - அப்பொழுது; அருட்கு நாயகன் - கருணைக்குத் தலைவனான இராமன்; மதி சால் தம்பியை - அறிவு நிறைந்த தன் தம்பி இலக்குவனை (நோக்கி); ஐய - ஐயனே! கதிரோன் மைந்தனை - சூரியன் புதல்வனான சுக்கிரீவனுக்கும்; கைகளால் - உன் கரங்களால்; விதியால் மெளலி மிலைச்சுவாய் - முறைப்படி முடி சூட்டுவாய்; எனா - என்று; வல்லை ஏவினான் - விரைந்து கட்டளையிட்டான்.

அருட்கு நாயகன் - இராமன் கருணை நிறைந்தவன் என்பதைக் 'கருணையின் கடல் அணையர்' (3758) 'கருணை ஆம் அமிழ்தம் காலும்' (6497), 'கருணை வள்ளல்' (6501) என்ற இடங்களில் காண்க. மெளலி - வடசொல். நல்ல காரியங்களை உடனே செய்துவிடல் நல்லது ஆதலின் 'வல்லை ஏவினான்' என்றார். விதி - முடிசூட்டுவதற்கு நூல்கள் கூறும் முறைகள். பதினான்கு ஆண்டுகள் தன் தந்தையின் சொல்லைக் காக்க விரதம் மேற்கொண்டிருப்பதால் இராமன் நகருட் செல்ல இயலாது ஆதலின், இலக்குவனையே மணிமுடி சூட்டுமாறு இராமன் கட்டளையிட்டான். பின் வீடணனுக்கும் இவ்வாறே செய்விப்பதும் காண்க.

வாலியின் ஈமக்கடன்கள் முடிந்தபிறகு அனுமன் இராமனைக் கிட்கிந்தைக்கு வந்து சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு வேண்ட, இராமன் மறுத்து அனுமனையே, பிற வானரத் தலைவர்களுடன் அவ்விழாவை நிறைவேற்றப் பணித்துச் சுக்கிரீவன் முடிசூட்டிக் கொள்ளவும், அங்கதன் இளவரசுப்பட்டம் சூட்டிக் கொள்ளவும் சொன்னான் என்பது வான்மீகம். இலக்குவனை ஏவினதாக அந்நூலில் இல்லை. அத்யாத்ம ராமாயணமும், துளசிதாசர் இராமாயணமும் இலக்குவனைக் கொண்டு முடி சூட்டப் பெற்றதாகக் கூறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time the lord of grace
  2. quickly commanded his wise younger brother:
  3. "Brother, with your own hands
  4. crown the son of the Sun according to the rites."

What the poem says

The next morning Irāmaṉ, lord of compassion, tells Ilakkuvaṉ to crown Cukkirīvaṉ, son of the Sun god, with due ceremony and without delay, since good deeds should be done at once. Irāmaṉ himself has vowed to keep to the forest for fourteen years and will not enter a city, so his brother acts for him, as he will later for Vīṭaṇaṉ.

The commentary notes that in Vālmīki, Rāma tells Hanumān and the monkey leaders to hold the coronation, and Lakṣmaṇa has no part. The Adhyātma Rāmāyaṇa and Tulasīdās follow the version in which Lakṣmaṇa crowns him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1atu kālattil aruṭku nāyakaṉ
mati cāl tampiyai vallai ēviṉāṉ
'katirōṉ maintaṉai aiya! kaikaḷāl
vitiyāl mauli milaiccuvāy' eṉā.