கம்பராமாயணம் 421 · பால 8.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காதலன் சேணின் நீங்க - கணவனான இரிசிகன் செய்த தவப்பலனால் வான்வழி செல்வதற்குத் தன்னை விட்டு நீங்க; கவுசிகை தரித்தல் ஆற்றாள் - என் முன்னவளான கவுசிகை பொறுக்க இயலாதவளாகி; விழு நதி வடிவமாக - பெரிய ஒரு நதிவடிவம் எடுத்துக்கொண்டு; மீது உறப்படரல் உற்றாள் - மேலே போகப் புறப்பட்டாள்; மாதவர்க்கு அரசு நோக்கி - முனிவர்களுக்கு அரசனான இரிசிகன் அதனைப் பார்த்து; மாநிலத்து உறுகண் நீக்க - நிலவுலகத்துத் துன்பத்தைப் போக்க, நதியாய்ப் போதுக என்னா - ஆறாகப் பெருகிச் செல்வாயாக என்று (கூறி); பூமகன் உலகு புக்கான் - பிரமன் உலகைச் சென்றடைந்தான்.
காதலன்: கணவன். சேண்: உயர்வு இங்கு வானைக் குறிக்கும்). தரிக்கல்: பொறுத்தல். மீது: உயர்வழி. படரல்: நகர்தல். உறுகண்: துன்பம். போதுக: போவாயாக. வியங்கோள்வினைமுற்று. பூமகன்: மலரில் இருப்பவன். புக்கான்: புகுந்தான்.
கணவன் விண்ணுலகேக, பொறுக்கலாற்றாத கவுசிகை நதியாகி மேலே தொடர, இரிசிகன் உலகத்துத் துன்பம் நீக்க, ஆறாகச் செல்க எனக்கூறி, பிரமனுலகு சென்றான் என்க. என்னா: என்று கூறி. செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When her beloved left her for the heights, Kaucikai, unable to bear it,
- took the form of a great river and began to flow upward after him;
- the king of great ascetics saw this and said, To remove the sorrow of the wide earth,
- go on as a river; and he entered the world of the flower-born god.
What the poem says
When her husband rose to the heavens, Kaucikai could not bear to be parted from him. She turned herself into a mighty river and began streaming upward to follow him.
Iricikaṉ saw her and told her to flow instead as a river on earth, to take away the sufferings of its people, and then he entered Brahmā's world. This is why the river is holy.