கம்பராமாயணம் 423 · பால 8.16

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தங்கள் நாயகரில், தெய்வம் தான் பிறிது இல்' என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்!
எம் கண் நால் மறைக்கும் தேவர் அறிவுக்கும் பிறர்க்கும் எட்டாச்
செம் கண் மால் இருந்து மேல் நாள் செய் தவம் செய்தது; அன்று ஏ.

பொருள் · Meaning in Tamil

தங்கள் நாயகரின் தெய்வம் தான்பிறிது இலை - தங்களது கணவரைக் காட்டிலும் தெய்வம் வேறுஇல்லை; என்றெண்ணும் மங்கைமார் - என்று கருதும் பெண்ணரசிகளது; சிந்தை போலத் தூயது - மனத்தைப்போல (இச்சோலை) தூய்மையானது; மற்றும் கேளாய் - பின்னும் சொல்லுகிறேன் கேட்பாயாக; எங்கள் நான் மறைக்கும் - எங்களுடைய நான்கு வேதங்களுக்கும்; தேவர் அறிவிற்கும் - தேவர்களின் நுட்பமான அறிவுக்கும்; பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் - மற்றவர்களுக்கும் (உள்ளம், உரை செயல்களால் எட்டமுடியாத திருமால்; இருந்து மேல் நாள் - இங்குத் தங்கி முன் ஒரு காலத்திலே; செய்தவம் செய்ததன்றே - செம்மையான தவத்தைச் செய்த இடமல்லவா?

நாயகன்: தலைவன், கணவன். 'மங்கை' பருவப் பெயரேயாயினும் பெண்களைப் பொதுவாக இப்பெயரில் குறிப்பிடுவது மரபு. மார்: பலர்பால் விகுதி. சிந்தை: மனம். “எங்கள் நான்மறை” என்றது, அறநெறி நிற்கும் அறிவுடையோர்க்கு உரியது என்பதை உணர்த்தி நின்றது. எட்டா: எட்டாத (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். எட்டு: பகுதி. செங்கண்மால் தவம் செய்த சிறப்புடையது இச்சோலை என்றானென்க. அன்றே: அல்லவா என்பது பொருள். அசை எனினும் பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It is as pure as the minds of women who think,
  2. There is no god other than our husband; and hear more:
  3. red-eyed Māl, beyond the reach of our four Vedas, of the gods' understanding, and of all others,
  4. stayed here in former days and performed true penance, did he not?

What the poem says

The sage describes the grove. It is as pure as the heart of a devoted wife who holds that there is no god but her husband.

More than that, it is the very place where Viṣṇu, the red-eyed Māl whom neither the Vedas nor the gods can fully grasp, once lived and performed austerities.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taṅkaḷ nāyakariṉ, teyvam tāṉ piṟitu ilai' eṉṟu eṇṇum
maṅkaimār cintai pōlat tūyatu; maṟṟum kēḷāy!
eṅkaḷ nāṉmaṟaikkum tēvar aṟiviṟkum piṟarkkum eṭṭāc
ceṅ kaṇ māl iruntu mēlnāḷ cey tavam ceytatu; aṉṟē.