கம்பராமாயணம் 424 · பால 8.17

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பாரின்பால் விசும்பின்பாலும் பற்று அறப் படிப்பது, அன்னான்
பேர்' என்பான்,'அவன் செய் மாயப் பெரும் பிணக்கு ஓருங்கு தேர்வார்
ஆர்?' என்பான், அமல மூர்த்தி கருதியது, அறிதல் தேற்றாம்;
ஈர் ஐம்பான் ஊழிக் காலம் இரும் தவம் இயற்றி இட்டான்.

பொருள் · Meaning in Tamil

பாரின்பால் விசும்பின் பாலும் - மண்ணுலகிலும் விண்ணுலகிலும்; பற்று அறப்படிப்பது - (பிறப்புக்குக் காரணம் ஆன) உலகப் பற்றுக்கள் நீங்கச் சொல்லப் பெறுவது; அன்னான் பேர் என்பார் - அத்திருமாலின் பெயர்களே என்று சொல்லிய கோசிகன் மேலும்; அவன் செய் மாயப் பெரும்பிணக்கு - அப்பரமன் செய்யும் மாயமாகிய பெருங்கலகத்தை; ஒருங்கு தேர்வார் ஆர் என்பான் - ஒரு சேரத்தெளிந்து தேர்பவர் யாரென்று சொல்லும் தெளிவுடையவர் எவரும் இலர் என்று கூறிவிட்டு; அமலமூர்த்தி கருதியது - களங்கமற்ற அப்பரமன் நினைத்துள்ளதை; அறிதல் தேற்றாம் - அறிந்து சொல்லும் தெளிவில்லேன்; ஈரைம்பது ஊழிக்காலம் - நூறு யுகம்வரையும்; இருந்தனன் யோகத்து இப்பால் - இவ்விடத்திலே யோகத்தில் இருந்தான் என்றான்.

பார்: நிலம். விசும்பு: வான். 'பால்' இரண்டிடத்தும் ஏழனுருபுகள். பற்று: ஆசை (முதல்நிலைத் தொழிற்பெயர். பெரும்பிணக்கு: இன்ப துன்பங்களைத் துய்க்கச் செய்யும் பெருங்கலகம் என்பர் என்பாம்: என்று சொல்வோம். மூர்த்தம்: வடிவம். அமலம்: குற்றமற்றது. தேற்றாம்: தேறமாட்டோம். ஊழி: யுகம் (பேரளவைக் காலம்). ஈரைம்பான்: இரண்டு ஐம்பது (எனவே நூறு). இப்பால்: இவ்விடம். இருந்தனன்: இருந்தான்.

விண்ணும் மண்ணும் பற்றுக்கள் நீங்கச் சொல்லுவது அப்பரமன் பெயர்களே. உலகத்தவரை இன்ப, துன்பங்களை அடையச் செய்ய, அவன் செய்யும் மாயப் பிணக்கை எல்லாம் தேர்ந்து தெளிவார் யார்? அத்தகைய பெருமான் ஒரு நூறு யுகங்கள் இவ்விடம் யோகத்தில் இருந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What is recited on earth and in heaven to end all attachment is his name, he said;
  2. who can wholly unravel the great tangle of illusion he weaves? he said;
  3. what the spotless one intended we cannot know;
  4. for eighteen ages he remained here in yoga.

What the poem says

The sage says that the names of Viṣṇu are what beings on earth and in heaven recite to free themselves from worldly attachment, and that no one can fully understand the great play of illusion through which he makes creatures experience joy and sorrow.

Nor can anyone tell why the pure Lord chose to sit here in yogic meditation for so many ages. The verse reads "eighteen ages"; the commentary's text has "a hundred."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pāriṉpāl vicumpiṉpālum paṟṟu aṟap paṭippatu, aṉṉāṉ
pēr' eṉpāṉ, 'avaṉ ceymāyap perum piṇakku oruṅku tērvār
ār?' eṉpāṉ, amala mūrtti karutiyatu, aṟital tēṟṟām;
īr oṉpatu ūḻikkālam iruntaṉaṉ yōkattu ippāl.