கம்பராமாயணம் 425 · பால 8.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய் - அத்தகைய திருமால் இங்கு வாழ்ந்து வருகின்ற அந்தக் காலத்திலே; ஊனம் இல்ஞாலம் ஒடுங்கும் எயிற்று - குற்றமற்ற இவ்வுலகம் ஒடுங்கத் தகுந்த இரு பற்களை உடைய; ஆண் ஏனம் எனும் திறல் - ஆதிவராகத்தோடு ஒப்பு கூறத்தக்கவன் இவனே என்னுமாறு; மாவலி என்பான் - மகா பலி என்னும் பெயருடைய அசுரர்குலத் தலைவன்; வானமும் வையமும் - விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும்; வவ்வுதல் செய்தான் - கவர்ந்து தனக்குரியதாக்கிக் கொண்டான்.
ஆன+அவன்: ஆனவன் அகரம் தொக்கது. 'அந்நாள்வாய்' இதில் 'வாய்' ஏழனுருபு. ஊனம்: குறைபாடு. 'எயிறு' இங்குப் பற்களாகும். “ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் ஏனம்” உலகத்தைத் தனது ஒற்றைக் கொம்பிலே தாங்கிய வராக மூர்த்தியை இவ்வாறு சிறப்பிக்கிறார் “பன்றியால் படி எடுத்த பாழியான்” என்பர்; அது உன், வென்றியார் உன்னெயிற்றின் மென்துகள் போன்று இருந்ததால்” என்ற அஷ்டப் பிரபந்தப் பாடல் ஒப்பிடத் தக்கதாம். வையம்: பூமி
ஆதிவராகத்தை ஒத்த வலிமைபடைத்த மகாபலி, விண்ணையும், மண்ணையும் கவர்ந்து தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the days when he was dwelling here,
- one called Māvali, mighty as the male boar
- in whose tusk the whole flawless earth was held,
- seized both the heavens and the earth.
What the poem says
While Viṣṇu was meditating in this grove, the Asura king Māvali (Mahābali) rose to power. He was as strong as the great Boar, Viṣṇu's earlier incarnation, which lifted the whole earth on its tusk from the bottom of the sea.
Māvali conquered and took possession of both heaven and earth.