கம்பராமாயணம் 426 · பால 8.19

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செய்தவன் வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றினன் நின்றான்
ஐயம் இல் சிந்தையன் அந்தணர் தம்பால்
வையமும் யாவும் வழங்க வலித்தான்.

பொருள் · Meaning in Tamil

செய்த பின் - மாவலி அவ்வாறு விண்ணையும் மண்ணையும் வவ்வுதல் செய்த பிறகு; வானமும் செயல் ஆற்றா - தேவர்களும் செய்ய இயலாத; நெய்தவழ் வேள்வியை - நெய்மிகுந்து அவி வழங்கும் வேள்வியை; முற்றிட நின்றான் - செய்து நிறைவேற்ற நிலைத்தவனாகி; ஐயம் இல் சிந்தையர் - ஐயமில்லாத உள்ளம் உடையவராகிய; அந்தணர் தம்பால் - அந்தணர்களிடத்திலே; வையமும் யாவும் - பூமியையும் மற்றெல்லாவற்றையும், வழங்க வலித்தான் - வழங்கத் துணிந்தான்.

செயல்: செய்தல் (தொழிற்பெயர். ஆற்றா: முடியாத. 'நெய்தவழ் வேள்வி' என்று குறிப்பால் 'ஊன்' விலக்கியது குறிக்கப்பட்டது. நின்றான்: முற்றெச்சம் (நின்றானாகி). வலித்தான்: துணிவு கொண்டான். தேவர்களும் செய்ய முடியாத வேள்வியைச் செய்து முடிக்க நினைத்து - அந்த வேள்விக் காலத்தே வையமும் யாவும் - ஐயமில் சிந்தையரான அந்தணருக்கு வழங்கத் துணிந்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After doing this, he set himself to complete a sacrifice rich with flowing ghee
  2. that even the gods could not accomplish,
  3. and resolved to give the earth and everything else
  4. to brahmins whose minds were free of doubt.

What the poem says

Having seized heaven and earth, Māvali undertook a great sacrifice, one of ghee offerings without animal flesh, of a kind even the gods could not complete.

As part of it, he vowed to give away the earth and all he owned to steadfast brahmins. This vow of limitless giving is what Viṣṇu will use to trap him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceytapiṉ vāṉavarum ceyalāṟṟā
ney tavaḻ vēḷviyai muṟṟiṭa niṉṟāṉ
aiyam il cintaiyar antaṇartampāl
vaiyamum yāvum vaḻaṅka valittāṉ.