கம்பராமாயணம் 427 · பால 8.20

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானவர் ஆயது அறிந்தனர் - தேவர்கள் மாவலியின் அந்தச் செய்தியைத் தெரிந்தனர்; அந்நாள் மாயனை வந்து வணங்க நின்றார் - அப்போது திருமாலை வந்து வணங்கி நின்றனர்; தீயவன் வெந்தொழில் தீர் என இரந்தார் - கொடியவனான மாவலியினது கொடுந்தொழிலைத் தீர்ப்பாய் எனக் கெஞ்சிக் கேட்டனர். நாயகனும் அது செய்ய நயந்தான் - தலைவனாகிய திருமாலும் அக்காரியத்தைச் செய்ய ஒருப்பட்டான்.

ஆய+அது: ஆயது; அகரம் தொக்கது. அறிந்தனர்: முற்றெச்சம். மாயன்: மாயச் செயல்களில் வல்லவன். இரத்தல்: குறை வேண்டல். வெந்தொழில்: கொடுந்தொழில் (பண்புத் தொகை). நாயகன்: உலகத் தலைவன். நயத்தல்: சொல்லத் தொடங்குதல்

மாவலியின் அச்செயலறிந்த வானவர் திருமாலிடம் வந்து வணங்கி, இத்தீயவனது கொடுந் தொழிலைத் தீர்க்க வேண்ட மாயவனும் அதைச் செய்ய ஒருப்பட்டான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods came to know of it, and that day
  2. came to Māyaṉ, bowed, and begged him;
  3. Put an end to the cruel doings of the wicked one, they said, and stood there;
  4. and the Lord consented to do it.

What the poem says

Learning of Māvali's power and his great sacrifice, the gods come to Viṣṇu, the master of wondrous illusions, bow before him and plead with him to end the wicked king's oppression.

The Lord of the world agrees to act.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyatu aṟintaṉar vāṉavar an nāḷ
māyaṉai vantu vaṇaṅki irantār;
'tīyavaṉ ven toḻil tīr' eṉa niṉṟār;
nāyakaṉum atu ceyya nayantāṉ.