கம்பராமாயணம் 429 · பால 8.22

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அற்புதன் - ஆச்சரிய மாயையில் வல்லவனாகிய திருமால்; முப்புரி நூலினன் - மூன்றாகத் திரிக்கப்பட்ட பூணூலை அணிந்தவனாகியும்; முஞ்சியன் - முஞ்சி என்னும் புல்லாலாகிய அரைநாணை உடையவனாகியும், விஞ்சை கற்பது ஓர் நாவன் - வேதவித்தையைச் சொல்லுகின்ற நாவைக் கொண்டவனாகவும்; அனல்படு கையன் - அனல் தோன்றும் கையை உடையவனாகவும்; அற்புதரே அறியும் - அற்புத ஞானம் வாய்ந்த மேலோர்களே அறிந்து கொள்ளத் தகுந்த தான; தன் சிற்பதம் ஒப்பது ஓர் - தனது ஞான நிலைக்கு ஒப்பதாகிய ஒரு; மெய்க்கொடு சென்றான் - வடிவத்தை எடுத்துக் கொண்டு மாவலியின் வேள்விச் சாலைக்குச் சென்றான்.

முப்புரி நூல்: பூணூல். புரிதல்: திரித்தல். முஞ்சி: ஒரு வகைப்புல். பிரமச்சாரிகள் அணிய வேண்டிய அரை நாண் என்பர். 'அனல் படுகையன்' பிரமசரிய நோன்புக்குரிய சமிதாதானம் என்னும் வேள்வியைச் செய்யும் பழக்கத்தால் தோன்றிய அவ்வனல் தோன்றும் கையை உடையவன் என்பது பொருள். 'கொடு' கொண்டு என்பதன் இடைக்குறை. விஞ்சை கற்பதொர் நா: வேத மந்திரங்களாகிய வித்தையை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் நாவாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wearing the triple-stranded thread, girt with muñja grass, with a tongue
  2. that recites sacred learning, with a hand that bears fire,
  3. the Wondrous One went, in a body that matched his own state of pure knowing,
  4. which only the wondrous can know.

What the poem says

Viṣṇu goes to Māvali's sacrifice disguised as a young brahmin student: he wears the sacred thread and a girdle of muñja grass, has Vedic verses always on his tongue, and his hand is marked by the fire of the daily offerings a student tends.

This humble form reflects his true nature as pure consciousness, something only the truly wise can recognise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muppurinūliṉaṉ, muñciyaṉ, viñcai
kaṟpatu ōr nāvaṉ, aṉal paṭu kaiyaṉ,
aṟputaṉ, aṟputarē aṟiyum taṉ
ciṟpatam oppatu ōr meykkoṭu ceṉṟāṉ.