கம்பராமாயணம் 430 · பால 8.23

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்று அவன் வந்தது அறிந்து - அன்று அந்த வாமனன் வந்ததை அறிந்து; உலகு எல்லாம் வென்றவன் - உலகையெல்லாம் வென்றவனான மாவலி, முந்தி விரைந்து எதிர் கொண்டான் - முற்பட விரைந்து சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தான். பின்பு; நிறைந்தோய் - நிறைந்த தவம் உடைய மேலோனே; நின்தனின் அந்தணர் இல்லை - உன்னைவிடச் சிறந்த அந்தணர் வேறில்லை; என்தனின் உய்ந்தவர் யார் இனி என்றான் - என்னைவிட உய்வு பெற்றவர் இனி இங்கு யார் இருக்கிறார்கள் என்றான்.

உலகெல்லாம் வென்றவன்: மகாபலிச் சக்கரவர்த்தி. முந்தி: முன். நின்தன் என்தன் இவைகளில் 'தன்' இரண்டும் “அசைகள்” “எதிர் கொண்டான்” எதிர் கொண்டு அழைத்து வந்தான் என்பது பொருள். நிறைந்தோய்: தவத்தாலும், தன்மையாலும் நிறைந்தவன் என்பதை உணர்த்தும். வாமனன் வந்ததை அறிந்த மகாபலி எதிர்சென்று அழைத்து வந்து நிறை தவத்தோய் நின்னில் உயர்ந்தாருமில்லை, என்னில் உய்ந்தாருமில்லை எனக் கூறி மகிழ்ந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That day, learning that he had come, he who had conquered all the worlds
  2. went out first in wonder and received him:
  3. There is no brahmin like you, O perfect one;
  4. who is there more blessed than I? he said.

What the poem says

Māvali, conqueror of the worlds, hears that the young brahmin has arrived and hurries out in wonder to welcome him.

He tells his guest that there is no brahmin to equal him, and that no one could be more fortunate than Māvali himself in receiving such a visitor.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṟu avaṉ vantatu aṟintu, ulaku ellām
veṉṟavaṉ munti viyantu, etir koṇṭāṉ;
'niṉtaṉiṉ antaṇar illai; niṟaintōy
eṉtaṉiṉ uyntavar yār uḷar?' eṉṟāṉ.