கம்பராமாயணம் 432 · பால 8.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிந்தை உவந்து - (மாவலி இதைக் கேட்டு) மனம் மிக மகிழ்ந்து; என் செய என்றான் - மறு மொழியாக நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்; அந்தணன் - அதைக் கேட்ட வாமனனாக வந்த திருமால்; வெந்திறலோய் - கொடிய வலிமை வாய்ந்த மாவலியே; உண்டேல் மூவடிமண் அருள் இது வேண்டும் - உள்ளதாயின் என் காலால் மூன்றடி மண் தருவாயாக இதுவே வேண்டும்; எனா முன் தந்தனென் என்றான் - என்று சொல்லுதற்கு முன்பே (மாவலி) தந்தேன் என்றான்; வெள்ளிதடுத்தான் - அப்போது அசுர குருவாகிய சுக்கிரன் தாராதே என்று தடுத்தான்.
சிந்தை: மனம். உவந்து: மிக மகிழ்ந்து. உண்டேல்: உள்ளதாயின் (என்றது உற்சாகத்தின் பொருட்டு). வெந்திறல்: வெம்மையாகிய திறல் (பண்புத்தொகை) எனா: செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம். எனாமுன்: என்று கூறி முடிப்பதற்கு முன்பே. தந்தனென்: தந்தேன் விரைவு பற்றி வந்த இறந்த கால வினைமுற்று. தருவேன் என்பது பொருள். வழு அமைதி. சுக்கிரன் என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம் வெள்ளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Glad at heart, he answered, What shall I do for you?
- The brahmin said: If you have it to grant, three paces of earth,
- O you of fierce strength, this is what I want; before he had finished,
- I have given it, he said; and Velli tried to stop him.
What the poem says
Delighted, Māvali asks what he can do. The dwarf asks for just three paces of ground, measured by his own small feet.
Before he can even finish asking, Māvali says "I have given it" (the past tense marking his eagerness). At that moment Veḷḷi, Śukra, the preceptor of the Asuras, steps in to stop the gift.