கம்பராமாயணம் 433 · பால 8.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய! இது கண்ட திறத்திது கைதவம் - தலைவனாகிய மாவலியே! ஆராய்ந்து உணர்ந்தால் இந்த அந்தண வடிவம் கபடமானது; கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல் - (இதனை மேகம் போன்ற நிறமுடைய குறள் வடிவம் என நினைக்காதே; அண்டமும் முற்றும் அகண்டமும் - இந்தப் பூமியையும் அதனைச் சூழ்ந்துள்ள பேரண்டங்களையும்; மேல் நாள் உண்டவன் ஆம் - முன் ஒரு காலத்திலே உண்டவனாகிய திருமாலே ஆகும்; இது உணர்ந்து கொள் என்றான் - இதை அறிந்து கொள்வாய் என்று கூறினான்.
திறம்: உணர்ச்சித் திறம். கைதவம்: பொய்மை. கொண்டல்: மேகம். குறள்: குறுகிய வடிவம். கொள்ளேல்: கொள்ளாதே. எதிர்மறை ஏவல் வினைமுற்று. முற்றுதல்: சூழ்தல். அல்லது வளைதல். கண்டறிந்து: ஆராய்ந்து உணர்ந்த போது. அண்டம்: உலகம். அகண்டம்: பேரண்டம்.
அசுர குருவாகிய சுக்கிரன், மாவலியை நோக்கி, ஐய! ஆராய்ந்துணர்ந்தால் இந்த வடிவம் வஞ்சகம்; பொய்மையானது. கொண்டல் நிறத்துக் குறள் வடிவம் என்று எண்ணாதே. அண்டமும் அகண்டமும் உண்டவனான திருமாலே என்பதைத் தெரிந்துகொள் என்றான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As far as I can see, sir, this is a trick;
- do not take him for a dwarf the colour of a rain-cloud;
- this is the one who long ago swallowed the cosmic egg, the whole of it, and all beyond it;
- understand that, he said.
What the poem says
Śukra warns Māvali. Look closely, he says: this little brahmin is a deception. He is not a dark-skinned dwarf at all but Viṣṇu himself, who once swallowed this world and all the universes beyond it.