கம்பராமாயணம் 434 · பால 8.27

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நினக்கு இலை; என் கை நிமிர்ந்து இட, வந்து
தனக்கு இயலா வகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரி ஆனது கை தலம் என்னின்,
எனக்கு இதன் மேல் நலம் யாது கொல்?' என்றான்.

பொருள் · Meaning in Tamil

நினைக்கிலை - சுக்கிரனே! நீ நினைத்துப் பார்த்துக் கூறினாயில்லை; என் கை நிமிர்ந்திட - என்னுடைய கை மேலாக நிமிர்ந்து நிற்க; தனக்கு இயலா வகை வந்து தாழ்வது - தனது தன்மைக்குப் பொருந்தாத விதத்தில் தானே வந்து என் முன் தாழ்ந்து நிற்பது; தாழ்வு இல் கனக் கரியானது கைத்தலம் என்னின் - எவ்விதத்திலும் தாழ்வில்லாத மேகம் போன்ற கரிய நிறத்தை உடைய திருமாலின் கை என்றால்; எனக்கு இதன்மேல் நலம் - எனக்கு இதைவிட மேலான நன்மை; யாது கொல் என்றான் - ஏது இருக்கிறது என்று மாவலி கூறினான்.

நினைக்கிலை: நினைத்துப் பார்த்துச் சொல்லவில்லை. நிமிர்ந்து: ஓங்கி. மேலாக “இயலா வகை” இதில் 'இயலா' என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 'தாழ்வது.....கைத்தலம்' என்று முடிக்க. கனம்: மேகம். யாது: எது. கைத்தலம்: கை; இங்கு உள்ளங்கையைக் குறித்து நின்றது. யாசிப்பவர் கையை விரித்து ஏற்றல் இயல்பாதலின் என்க. மேல்நலம்: மேலான நன்மை. யாது கொல் இதில் “கொல்” எதிர் மறைப் பொருளை உணர்த்தி நின்றது.

என்கை உயர்ந்து மேலே நிற்க, தானே வந்து என்முன் தாழ்ந்து நிற்பது - தனக்குப் பொருந்தாத வகையிலே, வாமனனாக வந்த திருமாலின் கை என்றால் இதைவிட மேலான நன்மை எது இருக்கிறது என்றான் மாவலி என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You have not thought it through: if, while my hand is raised above,
  2. what comes and is held low, in a way unfit for him,
  3. is the palm of the dark cloud-coloured one who is never low,
  4. what greater good could there be for me? he said.

What the poem says

Māvali is not deterred; Śukra's warning only delights him. When a gift is given, the giver's hand is above and the receiver's open palm below.

If the hand stretched out beneath his own belongs to Viṣṇu, the Lord who is never lowered, humbling himself to beg, then Māvali can imagine no greater honour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'niṉaikkilai; eṉ kai nimirntiṭa, vantu
taṉakku iyalāvakai tāḻvatu, tāḻvu il
kaṉak kariyāṉatu kaittalam eṉṉiṉ,
eṉakku itaṉmēl nalam yātukol?' eṉṟāṉ.