கம்பராமாயணம் 435 · பால 8.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நன்னெறி முன்னிய நூலவர் - நல்ல நெறியினையே நினைந்துள்ள நூலறிவு வாய்ந்த பெரியோர்கள்; துன்னினர் துன்னலர் என்பது சொல்லார் - நெருங்கியவர், நெருங்காதவர் என்ற வேறுபாடு கருதார்; உன்னிய தானம் - தாம் செய்வதாக நினைத்த தானப் பொருள்; உயர்ந்தவர் முன்வந்து கொள்க - உயர்ந்தோர் முற்பட வந்து கொள்க; என்னின் - என்று சொல்லிவிட்ட பிறகு அதனைப் பெறவந்திருக்கும் பலருள்ளும், இவன் துணை யாவர் உயர்ந்தார் - இந்த வாமனனுக்கு இணையாகக் கல்வி கேள்விகள் வல்ல உயர்ந்தோர் யாருண்டு?
துன்னினர்: நெருங்கியவர் அல்லது உறவினர் துன்னலர்: பகைவர் சொல்லார்: சொல்லாதவராகி (முற்றெச்சம்). நூலவர்: நூலறிவு வாய்ந்த மேலோர் உன்னிய: நினைத்த. தானம்: கொடை. கொள்க: வியங்கோள் வினைமுற்று. துணை: ஒப்பு யாவர்: யார்
நன்னெறி கருதிய மேலோர் வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாட்டை எண்ணாது, தாம் செய்ய நினைத்த தானத்தை உயர்ந்தோர் கொள்க என்று சொல்லுவராயின், இந்த வாமனனை விட வேறு உயர்ந்தோர் எவருண்டு என்றான் மாவலி என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those learned in the books who keep to the good path do not ask
- whether one is a friend or a foe; if they say, Let the worthiest
- come forward and take the gift we have intended,
- who is as worthy as this one?
What the poem says
Māvali continues. People who follow the scriptures and the right path do not ask whether a recipient is friend or enemy; they simply want the worthiest person to receive their gift.
If that is the rule, who could be worthier than this brahmin? Even if he is Viṣṇu, and even if he means harm, he is the best possible recipient.