கம்பராமாயணம் 4356 · கிட்கிந்தா 9.119

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின
அம் சிறை அறுபத்து அளக ஓளிய
எஞ்சல் இல் குழையன இடை நுடங்குவ
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே.

பொருள் · Meaning in Tamil

வஞ்சிகள் - வஞ்சிக் கொடிகள்; கொஞ்சுறு கிளி - கொஞ்சிப் பேசுகின்ற கிளிகளின்; நெடுங் குதலை கூடின - நீண்ட மதலைமொழிகள் (தம்மிடத்துப்) பொருந்தப் பெற்றனவாய்; அஞ்சிறை அறுபதம் - (தம்மிடம் மொய்க்கின்ற) அழகிய சிறகுகளை உடைய வண்டுகளாகிய; அளக ஓதிய - கூந்தலின் ஒழுங்கையுடையனவாய்; எஞ்சல் இல் குழையன - குறைவில்லாத தளிர்களை உடையனவாய் (குறைவில்லாத குழையெனும் காதணி உடையனவாய்), இடை நுடங்குவ - இடையில் ஒல்கி அசைவனவாய் (இடை, அசைவனவாய்); மகளிர் மான - மகளிரைப் போல; பொலிந்தன - விளங்கின.

வஞ்சிக்கொடிகள் மகளிர் போல விளங்கின என்பதாம். வஞ்சிக்கொடியில் கிளிகளின் மொழி மகளிர் குதலை போன்றும், மலரில் மொய்க்கும் வண்டுகள் மகளிர் கூந்தல் போன்றும், அழகு குறையாத குழை (தளிர் குழையணியாகவும் வஞ்சிக் கொடியின் நடுப்பகுதி துவளுதல் மகளிர் இடை துவளுதல் போலவும் இருந்தன.

குழை - தளிர் காதணி என்று இருபொருள்பட நின்றது. இடை - நடுப்பகுதி, மகளிர்இடை என இரு பொருள்பட்டு நின்றது. எனவே, உருவகத்தையும் சிலேடையையும் உறுப்பாகக் கொண்ட உவமை அணியாகும். அறுபதம் - வண்டு, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. குதலை - மகளிரின் எல்லாப் பருவத்திற்கும் கூறப்படும் மொழிநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Filled with the long, lisping talk of cooing parrots,
  2. with tresses of lovely-winged bees,
  3. with tender shoots never lacking, and slender waists that sway,
  4. the vañci creepers shone like women.

What the poem says

The vañci creepers in the season are pictured as young women. The parrots chattering in them are their lisping speech, the bees swarming on their flowers are their dark hair, their fresh shoots are earrings, and their slender middle stems bend like a woman's waist.

The verse rests on double meanings: kuḻai means both a tender shoot and an ear ornament, and iṭai both the middle of a stem and a woman's waist.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koñcuṟu kiḷi neṭuṅ kutalai kūṭiṉa
añciṟai aṟupata aḷaka ōtiya
eñcal il kuḻaiyaṉa iṭai nuṭaṅkuva
vañcikaḷ polintaṉa makaḷir māṉavē.