கம்பராமாயணம் 4357 · கிட்கிந்தா 9.120

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூனல் நந்து எலாம் - முதுகு வளைந்த நத்தைகளெல்லாம்; அளித்தன முத்து இனம் - தாம் ஈன்றனவாகிய முத்துக்கள்; தோற்ப - (மகளிரின் பற்களுக்கு ஒப்பாகாமல்) தோற்றுவிட்டமையால்; மான் அனார் - மான் போன்ற பார்வையை உடைய மகளிர்; எதிர் வெளிப்பட்டு - எதிரில் வெளிப்பட்டு வந்து; விழிக்கவும் வெள்கி - பார்ப்பதற்கும் நாணி; மேன்மையால் - (தம்) மேன்மையான பண்பினால், ஒளித்தன ஆம் என - ஒளிந்து கொண்டன என்று சொல்லுமாறு; ஒடுங்கு கண்ணன - ஒடுங்கிய கண்களை உடையனவாய்; மண்ணிடைக் குளித்தன - சேற்றில் மூழ்கின.

நத்தைகள் இயல்பாக மண்ணில் மறைந்ததற்குத் தாம் ஈன்ற முத்துக்கள் மகளிருடைய பற்களுக்குத் தோற்றதனால், அவர்கள் முன் வெளிப்பட்டுத் தோன்றவும் நாணி மறைந்தன எனக்கூறியது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி. மேன்மை என்பது மான உணர்வைக் குறித்தது. நத்தைகள் தாம் ஈன்ற முத்துக்களின் தோல்வியைத் தம் தோல்வியாகக் கருதி நாணிய மேன்மையைக் காண்க. முத்துப் பிறக்கும் இடங்களில் நத்தை. 'நத்தின் வயிற்றில் முத்துப் பிறக்கும்' என்பது பழமொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the pearls they had borne were outdone, when doe-eyed women
  2. came out and looked straight at them, ashamed, out of their sense of honour,
  3. as though hiding themselves, with their eyes drawn in,
  4. all the curve-backed snails plunged down into the mud.

What the poem says

As the season turns, the water-snails burrow into the mud. The poet gives a fanciful reason. Snails were believed to bear pearls, and those pearls have lost the contest with the teeth of the doe-eyed women. Too proud to face the women who beat them, the snails draw in their eyes and hide.

Their shame for their offspring's defeat is presented as a kind of dignity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷittaṉa muttu iṉam tōṟpa māṉ aṉār
veḷittu etir viḻikkavum veḷki mēṉmaiyāl
oḷittaṉa ām eṉa oṭuṅku kaṇṇaṉa
kuḷittaṉa maṇṇiṭai kūṉal nantu elām.