கம்பராமாயணம் 4358 · கிட்கிந்தா 9.121

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மழைபடப் பொதுளிய மருதத் தாமரை
தழைபடப் பேரிலைப் புரையில் தங்குவ
இழைபடு பெடையொடும் எள்ளில் நள்ளிகள்
புழை அடைத்து ஒடுங்கின பொச்சை மாக்கள் போல்.

பொருள் · Meaning in Tamil

மழை படப் பொதுளிய - மழை பெய்ததால் செழித்த; மருதத் தாமரை - மருத நிலத்திற்குரிய தாமரை; தழை பட - செழித்து வளர; பேர் இலைப் புரையில் தங்குவ - (அவற்றின் பெரிய இலையின் கீழ்த் தங்குவனவான; நள்ளிகள் - ஆண் நண்டுகள்; விழைபடு பெடையொடும் - விருப்பம் மிக்க தம் பெண் நண்டுகளுடனே; வச்சை மாக்கள் போல் - உலோபிகள் போல; மெள்ள - மெதுவாக; புழை அடைத்து - தம் வளையின் வாயிலைச் சேற்றால் அடைத்துக் கொண்டு, ஒடுங்க - அதன் உள்ளே ஒடுங்கிக் கிடந்தன.

இரவலர், நண்பர், விருந்தினர், சுற்றத்தினர் என எவரேனும் தம் இல்லத்திற்கு வந்துவிடுவரோ என்று அஞ்சி உலோபிகள் தம் வீட்டுக்கதவை அடைத்துக் கொண்டு தம் மனைவி மக்களுடன் உள்ளிருப்பர். அதுபோல ஆண்நண்டுகள், தன் பெடைகளோடு தாம் வாழும் வளைகளின் வாயிலைச் சேற்றால் அடைத்துக் கொண்டு உள்ளிருந்தன. நண்டுகளுக்கு உலோபிகள் உவமை ஆயினர். உவமை அணி. முன்னர்ப் 'பெடை' எனக்கூறியதால் 'நள்ளி' என்னும் நண்டின் பொதுப் பெயர் ஆண்நண்டைக் குறித்து நின்றது. மருதநிலத்திற்கே சிறப்புடையதாதலின் 'மருதத் தாமரை' என்றார். விலங்கு போன்ற மனிதர் என்ற இழிவு தோன்ற 'வச்சை மாக்கள் போல' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lotuses of the farmland, swelling with the rain,
  2. grew lush, and dwelling in the hollows under their great leaves,
  3. with their beloved mates, slowly the crabs
  4. sealed the mouths of their holes and shrank inside, like misers.

What the poem says

This is the last verse of the rainy-season episode. The lotuses of the fertile farmland are lush after the rains, and beneath their broad leaves the male crabs seal the openings of their burrows with mud and settle inside with their mates.

The poet compares them to misers who bolt their doors and stay in with their wives and children, afraid that a beggar, friend, guest or relative might come asking. The word used for the misers implies people no better than beasts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻai paṭap potuḷiya marutat tāmarai
taḻai paṭap pēr ilaip puraiyil taṅkuva
viḻaipaṭu peṭaiyoṭum meḷḷa naḷḷikaḷ
puḻai aṭaittu oṭuṅkiṉa vaccai mākkaḷ pōl.