கம்பராமாயணம் 4359 · கிட்கிந்தா 10.1

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன காலம் அகலும் அளவினில்
முன்னம் வீரன் இளவலை'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினன்;
மன்னன் வந்திலன்; என் செய்த ஆறு அரோ?

பொருள் · Meaning in Tamil

அன்ன காலம் - அத்தன்மையுடைய கூதிர்ப்பருவம்; அகலும் அளவினில் - நீங்கும் அளவில்; முன்னை வீரன் - மூத்தவனும் வீரனுமான இராமன்; இளவலை - தன் தம்பியான இலக்குவனை நோக்கி, மொய்ம்பினோய் - வலிமைமிக்கவனே! சொன்ன எல்லையின் ஊங்கினும் - (முன்பு நான் குறித்த நான்கு மாதத் தவணை கழிந்த பின்பும்; மன்னன் தூங்கினன் வந்திலன் - அச் சுக்கிரீவ அரசன் தாமதப்படுத்துவதை மேற்கொண்டு இங்கு வந்து சேரவில்லை; செய்த ஆறு என் - அவன் செய்த செயல் தான் என்ன?

கார்த்திகை மாதத்தில் வருவதாகச் சொன்ன சுக்கிரீவன் வராததால், இராமன் இலக்குவனைநோக்கிச் சுக்கிரீவன் இவ்வாறு வராமல் காலம் தாழ்த்துகிறானே என்றான் என்பது.

தூங்குதல் - செயலைத் தாழ்த்துதல், தாமதப்படுத்துதல், 'தூங்குக தூங்கிச் செயற்பால' என்பதில் (குறள் 672) இப்பொருள் அமைதல் காண்க. முன்னை - முன் பிறந்தவன்; முதன்மையான வீரர்களுள் தலைமையுடையவன். மொய்ம்பு - தோள், வலிமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As that season was passing away,
  2. the elder hero said to his younger brother, 'Mighty one!
  3. Even beyond the limit that was named, delaying,
  4. the king has not come; what is this he has done?'

What the poem says

This verse opens the Kiṭkintai chapter, named after the monkey capital. The cold season has passed, and Cukkirīvaṉ, whom Irāmaṉ made king after killing Vālī, has not come with his army as he promised.

Irāmaṉ asks Ilakkuvaṉ why the king is putting it off. The verb used means both 'to hang' and 'to delay', and the commentary links it to the Tirukkuṟaḷ's advice about which tasks may be delayed and which may not.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa kālam akalum aḷaviṉil
muṉṉai vīraṉ iḷavalai 'moympiṉōy!
coṉṉa ellaiyiṉ ūṅkiṉum tūṅkiya
maṉṉaṉ vantilaṉ; eṉ ceytavāṟu arō?