கம்பராமாயணம் 4360 · கிட்கிந்தா 10.2

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பெறல் அரும் திருப் பெற்று உதவிப் பெருந்
திறன் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன் அன்புகிடக்க; நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.

பொருள் · Meaning in Tamil

பெறல் அருந் திருப் பெற்று - (அந்தச் சுக்கிரீவன்) பெறுதற்கு அருமையான அரச செல்வத்தை (நம்மால்) அடைந்து; உதவிப் பெருந்திறன் - (அவனுக்கு) நாம் செய்த உதவியின் பெருமையை, நினைந்திலன் - கருதிப் பார்க்கவில்லை; சீர்மையின் தீர்ந்தனன் - (அவன் தனக்குரிய) ஒழுகலாற்றில் தவறிவிட்டான்; அறம் மறந்தனன் - (உதவி செய்தவரை மறவாத) நன்றியாகிய அறத்தை மறந்துவிட்டான்; அன்பு கிடக்க - அவனுக்கு நாம் செய்த அன்புச் செயலை மறந்தது இருக்கட்டும்; நம் மறம் அறிந்திலன் - அவன் நம்முடைய வீரச் செயல்களையும் நினைவிற் கொண்டானில்லை; வாழ்வின் மயங்கினான் - (ஆட்சியில் தன்னை மறந்து இன்பம் அனுபவித்து) வளமான வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கின்றான்.

'பெறல் அருந் திருப் பெற்று' - யாவராலும் பெறுதற்கியலாத அரச பதவியாகிய செல்வத்தைக் குறிக்கும். 'நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு' (4143) என்று இராமனே இவ்வரசைக் குறிப்பிடுகிறான். 'உதவிப் பெருந்திறன்' - 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் ஆற்றல் அரிது' (குறள். 101) 'காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது' - (குறள். 102) 'சீர்மையின் தீர்ந்தனன்': 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு' - (குறள். 110) மறம் - மறன்: ஈற்றுப் போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Having won a fortune hard to win, the great worth of the help
  2. he received he has not considered; he has fallen from right conduct;
  3. he has forgotten dharma, never mind affection; our
  4. might he has not reckoned with; he is lost in the pleasures of living.'

What the poem says

Irāmaṉ's anger at Cukkirīvaṉ grows. With Irāmaṉ's help Cukkirīvaṉ gained a kingdom that would otherwise have been out of his reach, yet he has forgotten that great favour. He has broken the duty of gratitude, never mind friendship, and he has forgotten how strong Irāmaṉ is. Now he is sunk in royal pleasures.

The commentary cites the Tirukkuṟaḷ: help given without being asked is worth more than earth and heaven, and every other sin may be forgiven except ingratitude.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'peṟal arun tirup peṟṟu utavip perun
tiṟam niṉaintilaṉ; cīrmaiyiṉ tīrntaṉaṉ;
aṟam maṟantaṉaṉ aṉpu kiṭakka; nam
maṟaṉ aṟintilaṉ; vāḻviṉ mayaṅkiṉāṉ.