கம்பராமாயணம் 4361 · கிட்கிந்தா 10.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நன்றிகொன்று - (இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்து; அருநட்பினை நார் அறுத்து - பெறுவதற்கு அருமையான நட்பாம் அன்புக்கயிறுஅற அழித்து; ஒன்றும் மெய்ம்மை - (எல்லோர்க்கும்) ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையை; சிதைத்து - குலைத்துவிட்டு; உரைபொய்த்துளான் - வாக்குத் தவறியவனை: கொன்று நீக்குதல் - கொன்று ஒழிப்பது; குற்றத்தின் நீங்கும் ஆல் - பழிபாவங்களிலிருந்து நீங்கிய செயலேயாகும் (ஆகவே); சென்று அவன் சிந்தையை - நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை; தேர்குவாய் - ஆராய்ந்து அறிந்து வருவாய்;
'நட்பு நாரற்றன' - (நாலடி. 12) 'நலத்தின்கண் நாரின்மை' - (குறள் 958) நார் - கயிறு அன்புப் பிணைப்பை உணர்த்திற்று. ஒருவன் செய்த நன்றியை மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those who have killed gratitude, cut through the cord of a rare friendship,
- broken the truth that binds all, and been false to their word:
- would killing and removing them count as a crime?
- Go there and find out what is in his mind.'
What the poem says
Irāmaṉ tells Ilakkuvaṉ that killing someone who has betrayed a benefactor, cut the bond of a precious friendship and broken his pledged word would be no sin.
Even so he does not order an attack. He sends his brother to Kiṭkintai to find out what Cukkirīvaṉ really intends. The 'cord' of friendship is a common Tamil image for the bond of affection.