கம்பராமாயணம் 4362 · கிட்கிந்தா 10.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெம்புகண்டகர் - மனம் கொதிக்கும் கொடியவர்கள்; விண்புக வேர் அறுத்து - (போரில் மடிந்து) வீர சொர்க்கம் அடையும்படி (அவர்களை) வேரொடு அழித்து; இம்பர் நல்லறம் செய்ய - இவ்வுலகில் முறையான தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டு; எடுத்த விற்கொம்பும் - (நாம்) கையில் ஏந்திய வில் தடியும்; உண்டு - (நம்மிடம்) உள்ளது; அருங்கூற்றமும் உண்டு - (யாராலும் தடுக்கமுடியாத) இயமனும் இருக்கிறான்; உங்கள் அம்பும் உண்டு - (வானரங்களாகிய) உங்களைக் கொல்லக் கூடிய வாலியைக் கொன்ற அம்பும் (எம்மிடம்) இருக்கின்றது; என்று நம் ஆணை - என்று நமது கட்டளையாக; சொல்லு - (சுக்கிரீவனிடம்) சொல்வாய்.
விராதன் முதலான அரக்கர்களையும் வாலியையும் கொன்ற வில்லும் அம்பும் கொண்டே சுக்கிரீவனையும், அவனுடைய வானரப் படைகளையும் இயமனுக்கு இரையாக்க முடியுமென்பதைச் சொல்லுமாறு இலக்குவனிடம் இராமன் உரைத்தான் என்பது. கண்டகர் - தீயோர். தீயோரை ஒறுத்து நல்லறம் நாட்டுதல் ஆகிய அவதாரப்பாங்கு இங்கே புலப்படுவது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"To uproot the seething wicked and send them to heaven,
- and to establish true dharma here, the bow-staff I took up
- is still with me; relentless Death is still here; and the arrow
- meant for you is here too": tell him that, as our command.'
What the poem says
Irāmaṉ gives Ilakkuvaṉ a stern message for Cukkirīvaṉ. The bow he took up to destroy the wicked and set up dharma on earth is still in his hand, Death is still ready, and the arrow that killed Vālī can serve for the monkeys too.
The warning reminds Cukkirīvaṉ that the weapons that killed Virātaṉ and Vālī can be turned on him. Punishing the wicked to restore dharma is the purpose of the divine incarnation.